ஆம்பூரில் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக ஒருவர் கைது - tn urban local body polls
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குள்பட்ட 20ஆவது வார்டிற்கு நகராட்சிப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம்பூர் வானகார தெரு பகுதியைச் சேர்ந்த ஆசிப் என்பவர் ஏற்கனவே வாக்களித்துவிட்டுச் சென்ற நிலையில் மீண்டும் ஒரு முறை வாக்களிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பூத் முகவர்கள் அவரைப் பிடித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். காவல் துறையினர் அந்த நபரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST