இது ரீல் இல்ல ரியல்: தோஷம் நீங்க ஆட்டுக்கு தாலி கட்டிய இளைஞர் - ஆந்திர மாநில செய்திகள்
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள நுசிவிடு என்ற இடத்தில் 'ஆடு' ஒன்றுக்கு இளைஞர் தாலி கட்டிய விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த இளைஞருக்கு திருமண தோஷம் உள்ளதாகவும், ஜாதகத்தின் படி இரண்டு முறை திருமணம் நடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தோஷம் நீங்க ஆடு ஒன்றை திருமணம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, யுகாதி நாளன்று அந்த இளைஞர் நவகிரக கோயிலில் ஆட்டுக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். தற்போது, அந்த இளைஞர் தீவிரமாக பெண் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST