இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கழிவறை வசதி மிக முக்கியமானது. இங்கு கழிவறை இல்லாததால் பல குற்றச்சம்பவங்கள் நேர்கின்றன என்பது குறித்து நீங்கள் அறிவீர்களா?
இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பல பெண் குழந்தைகளும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிலர் வல்லுறவுக்குப் பின்னர் கொலை செய்யப்படுகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பான வெளி எது என்பதை நோக்கி, இந்தச் சம்பவங்கள் கேள்வி எழுப்புகின்றன.
ஐ.நா.-வின் அறிவுறுத்தலின்படி, சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி, 'உலக கழிவறை தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கழிவறை பாதுகாப்பையும் சேர்த்து உறுதி செய்கிறது.
நீரும், சுகாதாரமும் மனிதர்களின் அடிப்படை உரிமையாக இருந்தபோதும், கிராமப்புற மக்களுக்கும், வீடற்றவர்களுக்கும் கழிவறை இன்னமும் சிக்கலான நிலையைத்தான் ஏற்படுத்தி வருகிறது.
உலக கழிவறை அமைப்பு தான், முதலில் உலக கழிவறை தினத்தை அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு 2001. சுகாதாரத்தை முழுவதும் பரப்ப முயன்று வரும் ஐ.நா., 2013ஆம் ஆண்டில் உலக கழிவறை தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முழுமையான சுகாதாரம் தனிமனிதனின் உரிமை என்ற போதும், உலகமெங்கிலுள்ள 2.5 பில்லியன் மக்களில் மூன்றில் ஒருவருக்கு கழிவறை வசதியில்லை என்பது தான் யதார்த்த நிலையாகும்.
நோயில்லா வாழ்க்கைக்கு சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துவது முக்கியமான காரணி. காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் சுகாதாரமற்ற கழிவறைகளால் பரவுகின்றன. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், குழந்தைகளின் உயிரிழப்பிற்கு வயிற்றுப்போக்கு ஒரு காரணமாகும்.
கழிவறைகளின் அவசியம்:-
- நோய்களைக் குறைத்தல்
- குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதலுக்கு,
- பாதுகாப்பை மேம்படுத்துதல்,
- குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வு
- பெண்கள், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளின் வளர்ச்சிக்கு அடிகோலும்.
ஒவ்வொரு ஆண்டும் கழிவறைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள், பரப்புரை மேற்கொள்ளப்பட்டாலும் அதனை டிஜிட்டல் மூலமாகச் செய்யும் போது இன்னும் கூட அறிமுகம் கிடைக்கலாம். சமூக வலைதளங்களில் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு #worldtoiletday, #ToiletAccessIsARight, #WeCantWait என்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகப் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகளின் விவரம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்:
- உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு கழிப்பறைகளைவிட மொபைல் போன்கள் எளிதில் கிடைக்கின்றன.
- ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பிற்கு சுகாதாரமின்மையால் ஏற்படும் வயிற்றுப்போக்கும் ஒரு காரணம்.
- உலகளவிய 2.4 பில்லியன் மக்களில் 40 விழுக்காட்டினருக்கு சுகாதாரமான கழிவறைக் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
- கடந்த 200 ஆண்டுகளை ஒப்பிடும் போது கழிவறைகள் மனிதனுடைய ஆயுள் காலத்தில் 20 ஆண்டுகளை அதிகரித்துள்ளது.
- வரும் 2030ஆம் ஆண்டின் மேம்பாட்டு இலக்குகளில் அனைவருக்கும் குடிநீரும், சுகாதாரமான கழிவறையும் கிடைக்கும் என ஐ.நா. அமைப்பு நம்புகிறது.
உலகமெங்கிலும் நீருக்கும், சுகாதாரத்திற்கு ஒரு டாலர் முதலீடு செய்யும்போது, சுகாதார மேம்பாட்டுக்கான செலவிடப்படும் 4.30 டாலரின் தேவை குறைகிறது. இது தொடர்பாக தேசிய புள்ளிவிவர அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) மூலமாக ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது.
கழிவறை பற்றிய என்எஸ்எஸ் தகவல்கள்:
கிராமப்புறங்களில் உள்ள 56.6 விழுக்காட்டினரும், நகரங்களில் உள்ள 91.2 விழுக்காட்டினரும் தங்களது இருப்பிடங்களில் குளியலறைகளைக் கொண்டிருக்கின்றனர்.
கழிவறையுடன் கூடிய குளியலறை:
- கிராமப்புறங்களில் 48.4 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் 74.8 விழுக்காட்டினரும் குடியிருப்புடன் இணைந்த குளியலறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
- இதைப் போல கிராமப்புறத்தில் வசிக்கும் 71.3 விழுக்காட்டினர் குடியிருப்புடன் அமைந்த கழிவறையைக் கொண்டுள்ளனர். நகர்ப்புறங்களில் அந்த விகிதம் 96.2 விழுக்காடாக உள்ளது.
அரசிடமிருந்து மக்கள் பெறும் பயன்கள் குறித்த கேள்வியில் கழிவறைகளும் முன்னர் இடம்பெற்றிருந்தது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்எஸ்எஸ் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிராமப்புறங்களில் 28.7விழுக்காட்டினர் கழிவறை வசதியின்றி இருந்தனர். அதே சமயம் 32 விழுக்காட்டினர் திறந்தவெளியில் மலம் கழிக்கப் பழகியிருந்தனர்.
கிராமப்புறங்களில் கழிப்பறைகள் இதே வேளையில் இந்தியா முழுவதும் 'ஸ்வச் பாரத் திட்டம்' மூலம் மேற்கொண்ட ஆய்வில் 6 விழுக்காட்டினர் மட்டுமே கழிவறை இல்லாதவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.
தேசிய புள்ளி விவர அமைப்பு போன்ற அதிகாரப்பூர்வமான அமைப்பின் புள்ளி விவரங்களை ஸ்வச் பாரத் இயக்கத்தின் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும்போது முரணானத் தகவல்களைக் காணமுடிகிறது. 'ஸ்வச் பாரத் மிஷன்' இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டும் திறந்தவெளி மலம் கழிக்காத இந்தியாவை உருவாக்கமுடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:எங்க ஊருக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர முடியுமா?: மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்!