உடலுறவுக்கு பின்னர் அசந்து தூங்குவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். பெரும்பாலும் ஆண்கள்தான் உடனடியாக தூங்கிவிடுவார்கள் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்திய ஆய்வறிக்கை, உடலுறவுக்கு பிறகு பெண்கள்தான் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்வதாக கூறுகிறது.
அமெரிக்காவில் நியூயார்க்கின் அல்பானி பல்கலைக்கழகம், உடலுறவுக்கு பிறகு ஆண்கள் அல்லது பெண்கள் யார் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்கின்றனர் என ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில், உடலுறவுக்கு பிறகு பெண்கள் தான் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்வதாக கூறுகிறது
இதன் முடிவுகள் Evolutionary Behavioral Sciences இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 226 கல்லுாரி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 128 பேர் பெண்கள்,98 பேர் ஆண்கள் ஆவர்.
உடலுறவுக்கு பிறகு தூக்கத்தை நாடும் ஆண்கள்
துணையுடன் உடலுறவு முடிந்த பிறகு, ஆண்கள் தான் முதலில் தூங்குவார்கள் என பல ஆய்வு முடிகள் மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது, அதற்கான காரணத்தை நியூயார்க் பல்கலைகழகத்தை வெளியிட்டுள்ளது.
வெளியாகும் ஹார்மோன்கள்
உடலுறவுக்குப் பிறகு உடலில் இருந்து ஆக்ஸிடாஸின் ஹார்மோன், ப்ரோலாக்டின் ஹார்மோன் வெளியாகிறது. உடலுறவின் போது, இந்த ஹார்மோன்கள் பெண்களைவிட ஆண்களின் உடலில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.