தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

'இருதய பிரச்னை உள்ளவர்களுக்கு தூக்கமின்மை': காரணம் என்ன?

இதய நோய்கள் மூளையின் உள்ளே அமைந்துள்ள பினியல் சுரப்பியில் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனின் உற்பத்தியை பாதிக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 24, 2023, 7:18 PM IST

ஹைதராபாத்:இதயம் தொடர்பான நோய்கள் மூளையில் இருக்கும் தூக்கத்திற்கான ஹார்மோன் சுரப்பதை பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள மியூனிக் பல்கலைக்கழகத்தின் (TUM) குழு தலைமையிலான ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல், ஆழ்ந்த உறக்கமின்மை, தூக்கத்தின் இடையே எழுந்திருத்தல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்கள் மூளையின் உள்ளே அமைந்துள்ள பினியல் சுரப்பியில் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனின் உற்பத்தியை பாதிக்கிறது என்பதை அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள், இந்த பினியல் சுரப்பி இதயம் மற்றும் மூளையை இணைக்கும் வகையில் கழுத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மெலடோனின் ஹார்மோன் பினியல் சுரப்பியில் உற்பத்தியாகும் நிலையில், இது இதயத்தைப் போலவே, தன்னியக்க நரம்பு மண்டலத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், உடலில் தன்னிச்சையான செயல்முறைகளை ஒழுங்குபடுத்தும் இந்த ஹார்மோன், இதனுடன் தொடர்புடைய நரம்புகள் மூளையின் கேங்க்லியா பகுதியில் உருவாகிறது. இது இதயம் மற்றும் பினியல் சுரப்பியை இணைக்கும் நுழைவு வாயாக செயல்படுகிறது.

இந்த கேங்க்லியா நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு நரம்பில் ஏதேனும் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், அது அதனுடன் தொடர்புடைய அனைத்து நரம்புகளையும் பாதிக்கும் என, TUM-இன் மருந்தியல் மற்றும் நச்சுயியல் பேராசிரியர் ஸ்டீபன் ஏங்கல்ஹார்ட் கூறியுள்ளார். மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபரின் கேங்க்லியவில் இந்த செல்களை அகற்றி புதிய நோய் ஏதிர்ப்பு மணடலத்தை உருவாக்கும் மேக்ரோபேஜ்கள்(ஒருவகையான வெள்ளை ரத்த அணு) அதிகம் சேர்வதாகவும், இதனால், நாளடைவில் கேங்க்லியா பகுதியில் வீக்கம் மற்றும் நரம்பு செல்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு வழிவகை செய்யும் எனவும் ஆய்வாளர் ஸ்டீபன் ஏங்கல்ஹார்ட் கூறியுள்ளார். மேலும், பினியல் சுரப்பியை நரம்பு மண்டலத்துடன் இணைத்து செயலாற்றும் பணி இதனால் தடைபடும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில், பினியல் சுரப்பியின் செயல்பாடுகள் குறித்தும், இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அந்த சுரப்பியில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் கேங்க்லியாவின் வாய் பகுதியில் இறந்த மேக்ரோபேஜ்கள் (ஒருவகையான வெள்ளை ரத்த அணு) தேங்கி அதனால் ஏற்பட்ட வடு மற்றும் வீக்கம் கண்டறியப்பட்டது. இது நாளடைவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், தூக்கமின்மை பிரச்னையை தூண்டும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட ஆய்வில் கேங்க்லியாவில் தேங்கி கிடக்கும் மேக்ரோபேஜ் இறந்த செல்களை மருந்துகள் மூலம் அகற்ற முடியும் எனக்கூறிய ஆய்வாளர்கள், இதன் மூலம் தூக்கமின்மை பிரச்னைக்கு மருந்துகள் மூலம் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வு முடிவு இதய நோயால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் ஆய்வார்களின் இந்த ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க:மைக்ரோவேவ் அவன் பாத்திரங்களால் ஆபத்து: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details