சென்னை:மனிதர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து, இயந்திரமயமாகி நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் உடல் வலுவிழந்து, நோய்த் தொற்றுகளும் ஏற்படுகின்றன. இதைச் சரி செய்ய நடைப்பயிற்சி மேற்கொள்வதே சிறந்த வழி எனக்கூறும் மருத்துவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் பொதுவாக அனைவருமே கட்டாயமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:Spices For Weight Loss Tips In Tamil: அஞ்சறைப் பெட்டிக்குள் இப்படி ஒரு ரகசியமா? இது தெரியாம போச்சே.!
நோய்கள் வருவதைத் தடுக்கிறது:காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சோம்பலின்றி இருக்கலாம். இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்கிறது. உடல் எடையைச் சம நிலைக்குக் கொண்டு வருகிறது. மேலும் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் குறையும்:காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, எண்டோர்பின்கள் வெளியாகின்றன. இதனால் நமது மனநிலை மேம்பட்டு, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றைச் சரி செய்கிறது. காலையில் கிடைக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, மனதிற்கு இதமளிக்கும். இதனால் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
இதையும் படிங்க:Breakfast Salads in Tamil: சுறுசுறுப்பான நாளை பெற வேண்டுமா: காலை உணவில் சாலட் எடுத்துக்கொள்ளுங்கள்.!