தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சருமத்தை மெருகூட்டும் வைட்டமின் ஈ! - வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது.

vitamins
vitamins

By

Published : Aug 26, 2021, 7:11 PM IST

ஹைதராபாத் : நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் வைட்டமின்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீராக செயல்பட உதவுகின்றன.

ஆனால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் முடி மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியம்.

கூந்தல்

இந்நிலையில், வைட்டமின் ஈ குறித்து மூத்த குழந்தைகள் நல மருத்துவர் லத்திகா ஜோஷி ஈடிவி பாரத்திடம் பேசினார்.

வைட்டமின் ஈ நன்மைகள்

உடலின் வளர்ச்சிக்கு அவசியமானது வைட்டமின் ஈ. இது ஆன்டிஆக்ஸிடேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தியில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது.

மருத்துவர்

இது இரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கம் உள்ளிட்ட உடலியல் செயல்முறைகளை கட்டுப்படுத்துகிறது. இது தவிர, இது தசைகளை சரிசெய்து செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

வைட்டமின் ஈ உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், இதனால் குழந்தையை இரத்த சோகையிலிருந்து பாதுகாக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு வைட்டமின் ஈ எவ்வளவு தேவைப்படுகிறது?

தேசிய சுகாதார நிறுவனங்களின்படி, 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 15 மி.கி வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. பாலூட்டும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 19 மில்லிகிராம் தேவை. அதேபோல், 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு வைட்டமின் இ 4 மி.கி தேவை.

உணவு பதார்த்தங்கள்

குழந்தைகளின் வயதின் அடிப்படையில், 1 வயது குழந்தைக்கு 6 மாதத்திற்கு 5 மி.கி., 1 முதல் 3 வயது குழந்தைக்கு 6 மி.கி., 4 முதல் 8 வயதுக்கு 7 மி.கி மற்றும் 9 முதல் 13 வயது வரை- வயதான குழந்தைக்கு ஒரு நாளைக்கு 11 மி.கி வைட்டமின் ஈ தேவைப்படுகிறது.

உங்களுக்கு வைட்டமின் ஈ குறைபாடு இருந்தால் என்ன ஆகும்?

  • நோயெதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும்
  • உடல் பாகங்கள் சீராக செயல்பட முடியாது
  • தசைகள் பலவீனமடையும்
  • பார்வை குறைதல் உள்ளிட்ட கண் பிரச்சினைகள்
  • உடல் பலவீனமாக இருப்பது
  • மலட்டுத்தன்மை
  • செரிமான பிரச்சினைகள்
  • அதிக முடி உதிர்தல்
  • தோல் தொடர்பான பிரச்சினைகள்
  • இரத்த ஓட்டம் மற்றும் இரத்த சோகை குறைந்தது
  • கொலஸ்ட்ரால் பிரச்சினைகள்
  • மனநல கோளாறுகள்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ நமது தோல், நகங்கள் மற்றும் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதை உட்கொள்வது மட்டுமல்லாமல், முடி மற்றும் சருமத்தில் தடவுவது முதுமையின் விளைவைக் குறைக்கிறது.

உடற்பயிற்சி

அத்துடன் தோலில் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைகிறது. எனவே, நீங்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் நீண்ட நேரம் இளமையாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், வைட்டமின் ஈ எண்ணெய் வறண்ட சருமத்தில் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

எப்படி உபயோகிப்பது?

வைட்டமின் ஈ எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில துளி வைட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தடவி லேசான கைகளால் மசாஜ் செய்தால், சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

அத்துடன் சருமத்தில் உள்ள திறந்த துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கும். கரு வளையங்களுக்கு இது நல்லது. இதற்காக, இரவில் தூங்குவதற்கு முன், கண்களின் கீழ் வைட்டமின் ஈ எண்ணெயை லேசான கைகளால் மசாஜ் செய்யவும்.

மசாஜ்

வைட்டமின் ஈ எண்ணெயை பலவீனமான மற்றும் உலர்ந்த நகங்களை அகற்றவும் பயன்படுத்தலாம்.

இரவில் தூங்குவதற்கு முன் சருமத்தில் வைட்டமின் ஈ எண்ணெயை லேசாக மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும். இதை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது கற்றாழை ஜெல் உடன் கலந்து, முகம் முழுவதும் மசாஜ் செய்து பின் கழுவலாம்.

சருமத்தில் உள்ள தழும்புகளைப் போக்க, காப்ஸ்யூல்களில் இருந்து வைட்டமின் ஈ எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்துங்கள்.

வீட்டு வேலைகளைச் செய்வது உங்கள் கைகளை உலர வைக்கலாம். இதனால், வைட்டமின் ஈ எண்ணெயுடன் கைகளை லேசாக மசாஜ் செய்தால் ஈரப்பதத்தை மீண்டும் கொண்டு வர முடியும்.

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்

நம் உடலில் வைட்டமின்கள் உற்பத்தி செய்யாததால், நாம் அதைப் பெற உணவுகளைச் சார்ந்திருக்க வேண்டும். பொதுவாக செயற்கை உள்ளிட்ட மற்ற இணை பொருள்களை நாடுவதை விட வைட்டமின் மற்றும் பிற ஊட்டச்சத்து தேவைகளை இயற்கை வளங்கள் மூலம் பூர்த்தி செய்வது நல்லது.

மாம்பழங்கள்

எனவே, வைட்டமின் ஈ-க்கு நல்ல ஆதாரமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள். சோயாபீன் எண்ணெய், பாதாம், வேர்க்கடலை, வெண்ணெய், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் நட்ஸ்கள் (கொட்டை உணவுகள்) முட்டை, உருளைக்கிழங்கு, கீரை, கடுகு, முட்டைகோஸ் ஆகியவற்றை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். மா, பப்பாளி, பூசணி, பாப்கார்ன் போன்றவயும் நல்ல உணவுப் பொருள்கள்.

இவ்வாறு மூத்த குழந்தைகள் நல மருத்துவர் லத்திகா ஜோஷி கூறினார்.

இதையும் படிங்க : தனியார் நிறுவனம் சார்பில் காவல் துறையினருக்கு வைட்டமின் மாத்திரைகள்!

ABOUT THE AUTHOR

...view details