ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களிடம் அமெரிக்க அரசு 1.95 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் 100 மில்லியன் அளவு மருந்தை சந்தைப்படுத்துதலுக்கு முன் வாங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஃபைசர் மருந்து நிறுவனத்திடம் இருந்து கரோனா மருந்து வாங்குகிறது அமெரிக்கா!
தற்போது இறுதிக்கட்ட சோதனையை தொடங்கியுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கரோனா மருந்தை 100 மில்லியன் அளவுக்கு வாங்க அமெரிக்க அரசு 1.95 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது.
US deals with Pfizer
கரோனா மருந்துக்கான இறுதிக்கட்ட சோதனைகள் மற்றும் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்த மாத இறுதிக்குள் தொடங்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
2020 அக்டோபர் மாத தொடக்கத்தில் தடுப்பூசியை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உரிமம் பெற ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்படுத்தலாம் என நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.