குழந்தை பருவத்திலிருந்தே, ஆறு அடிப்படை உரிமைகள் பற்றி நமக்கு பள்ளி பருவத்திலே கற்பிக்கப்படுகிறது. அவை, சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, மத சுதந்திரத்திற்கான உரிமை, கலாசார மற்றும் கல்வி உரிமைகள், சொத்துரிமை மற்றும் அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை ஆகும். ஆனால், நாம் பொதுவாக ஒப்புக்கொள்ள மறுக்கும் மற்றும் புறக்கணிக்கும் உரிமை தான் 'பாலியல் உரிமைகள்'. அவை குறித்த தெளிவான விளக்கத்தை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதைக் காண்போம்:
பாலியல் ஆரோக்கியம் தான் ஒரு மனிதனின் உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன, நிறைவுப்பெறுகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமை ஆவணங்கள், பிற ஒருமித்த ஆவணங்கள், தேசிய சட்டங்களில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள சில மனித உரிமைகளை பாலியல் உரிமைகள் ஏற்றுக்கொள்கின்றன. சில மனித உரிமைகளை மதிக்காமல், பாதுகாக்காமல் பாலியல் ஆரோக்கியத்தை அடையவும் பராமரிக்கவும் முடியாது என்ற ஒருமித்த கருத்து அதிகரித்து வருகிறது. பழங்காலத்தில் பேசாமல் தவிர்க்கப்பட்ட பாலியல் ஆரோக்கியம் குறித்த தலைப்பை இப்போதைய இளம் தலைமுறையினர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். எது சரி எது தவறு என்பதற்கான நிலைப்பாட்டை அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பாலியல் உரிமைகள் அனைவரும் ந ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், மக்கள் அடிப்படையில், குறிப்பாக பெண்கள் பாலியல் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பல சூழ்நிலைகள் உள்ளன.திட்டமிடப்படாத கர்ப்பம், வன்முறை, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு, பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நாம் எவ்வுளவு வளர்ச்சி அடைந்தாலும், பாலியல் பாகுபாடுகள் எப்போதும் நம் நாட்டில் எங்கயோ இருக்க தான் செய்கிறது.அதே போல், இருப்பினும், ஆண்கள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (யு.என்.எஃப்.பி.ஏ) கருத்துப்படி, “ நல்ல பாலியல் மற்றும் இனப்பெருக்கம் செயலில் ஆரோக்கியமாக ஈடுபடுவது தான் மனிதனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலமாக வைத்துள்ளது.மக்கள் திருப்திகரமான மற்றும் பாதுகாப்பான பாலியல் வாழ்க்கையில் ஈடுபடுகையில் தான், எப்போது செய்ய வேண்டும், எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் கிடைத்திட வேண்டும்.
பாலியல் ஆரோக்கியத்தை உணர முக்கியமான சில உரிமைகள்