தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சீதாப்பழம் வைத்து இப்படி ஒரு ஸ்வீட்டா.? : நாவில் தங்கி நிற்கும் சுவை... இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க.! - சீதாப்பழத்தை வைத்து ஸ்வீட் தயார் செய்வது எப்படி

சீதாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதை வைத்து ஒரு ஸ்வீட்டான ரெசிப்பி தயார் செய்து பாருங்கள்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 3:21 PM IST

சென்னை: ஸ்வீட் யாருக்குத்தான் பிடிக்காது.. ஆனால் சர்க்கரை அதிகம் சேர்க்காமல் பழத்தின் சுவையிலேயே ஒரு ஸ்வீட் தயாரித்து உட்கொண்டால் எப்படி இருக்கும். சீதாப்பழம் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அந்த பழத்தை வைத்து ஒரு சூப்பரான ரெசிப்பி தயார் செய்யலாம் வாருங்கள்.

சீதாப்பழம் ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரசி 2 ஸ்பூன்
  • சீதாப்பழம் 4
  • பாதாம்
  • முந்திரி
  • ஏலக்காய் பொடி
  • நெய்
  • சர்க்கரை 2 ஸ்பூன்
  • பால் அரை லிட்டர்

இதையும் படிங்க:ருசியான, ஆரோக்கியமான கேரட் ஆல்வா: இப்படி ரெடி பண்ணி பாருங்க..!

செய்முறை: முதலில் இரண்டு ஸ்பூன் பாஸ்மதி அரிசியை எடுத்து நன்றாக கழுவி விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். பிறகு அந்த அரிசியுடன் 3 பாதாம் பருப்பைச் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் தரியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல 4 சீதாப்பழ விதைகளை அகற்றி விட்டு சதையை மட்டும் மாற்றி ஒரு கப்பில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடிக்கனம் உள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் கொஞ்சம் நெய் ஊற்றி, அதனுடன் அந்த அரிசி மற்றும் பாதாம் பருப்புப் பொடியைப் பொட்டு நன்றாக வருக்க வேண்டும்.

வறுத்தப் பிறகு, அரை லிட்டர் பாலை அந்த பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கிளர வேண்டும். பால் மற்றும் அரிசி கலவை ஒரு பதத்திற்கு வந்த உடன், பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை நெய்யில் வருத்து, அதில் கொட்ட வேண்டும் அதனுடன் 2 ஸ்பூன் வெள்ளை சர்க்கரை போட்டு நன்றாக கிளறி விட்டு ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

பாதி அளவு சூடு ஆர வைத்து பிறகு அதில், விதை அகற்றப்பட்ட சீதாப்பழத்தை சேர்த்துக் கலக்கி மிதமான சூட்டில் பரிமாறவும். அதேபோல, இந்த ஸ்வீட்டை குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்துக் குளிரூட்டியும் சாப்பிடலாம். சுவையான அந்த சீதாப்பழ ஸ்வீட்டை இந்த சீசனிலேயே தயார் செய்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுத்துச் சுவைத்துப் பாருங்கள்.

சீதாப்பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ள நிலையில் உடலுக்குச் சுறுசுறுப்பு தருவது முதல், இரத்தத்தைச் சுத்தம் செய்வது, ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது, கண் பார்வைக்கு நலன் தருவது என ஏராளமான பலன்கள் இந்த சீதாப்பழத்தில் உள்ளன.

(சீதாப்பழத்தில் உள்ள கூடுதலானா ஆரோக்கிய நன்மைகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று படித்துப் பயன் பெறவும்.)

இதையும் படிங்க:தோல் புற்றுநோயை தடுக்கும் சீதாப்பழம்..! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details