தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

Curd recipe in Tamil: வீட்டில் மீதமுள்ள தயிரை இப்படியும் பயன்படுத்தலாம்.. குட்டி டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க.! - தயிர் சாதம்

Curd recipe in Tamil: வீட்டில் மீதமுள்ள தயிரை வைத்து வேறு என்னென்ன உணவுப் பொருட்கள் தயாரிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 7:35 PM IST

சென்னை:ஒரு வேளை உணவு உட்கொள்ளும்போது என்னதான் சாம்பார், கூட்டு, பொரியல், ரசம், பாயாசம் இருந்தாலும் கடைசியில் கெட்டியான தயிரைக் கொஞ்சம் போட்டு உணவு உட்கொண்டால்தான் அந்த உணவை உட்கொண்ட திருப்தியே பலருக்கு வரும்.

இந்த தயிர் உணவு உட்கொள்ளும்போது மட்டும் அல்ல அதையும் தாண்டி பல்வேறு ஆரோக்கியமான மற்றும் சுவை மிகு உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. வீட்டில் மீந்துபோன தயிரை கீழே கொட்டி வீணாக்காமல் அதை வைத்து வேறு என்னென்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:விடிய விடிய மொபைல் ஃபோன் யூஸ் பண்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த தகவல்.!

  • ஜூஸ் மற்றும் ஸ்மூத்திஸ் தயாரிக்கும்போது தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் ஸ்மூத்தி செய்யும்போது பழங்கள், தேன், ஐஸ் கட்டி மற்றும் அதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து மிக்சியில் அடித்துக் குடிக்கலாம். இது உங்கள் சருமம் பொலிவுடன் இருக்கவும், உடல் எடையைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
  • வீட்டில் இறைச்சி வாங்கி அதை நீங்கள் சமைக்கும் முன்பாக மஞ்சள், உப்பு, மிளகாய்த் தூள் உள்ளிட்டவை மற்றும் மசாலா பொடிகளைச் சேர்த்து உற வைத்து அதன் பிறகு சமைக்கும் வழக்கம் பலரது வீடுகளிலும் இருக்கும். குறிப்பாக சிக்கன் 65 போடும்போது இதை மேற்கொள்வார்கள். அப்போது இறைச்சி மற்றும் மசாலாவுடன் கொஞ்சம் தயிரையும் கலந்து ஊற வைத்துச் சமைத்தால் இறைச்சித் துண்டுகள் மென்மையாகவும், அதிக ருசியுடனும் இருக்கும்.
  • அதேபோல சாலட் தயாரிக்கும்போது அதில் கொஞ்சம் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் அது நாக்கில் ருசியைத் தூண்டும்.
  • இந்த தயிரில் தண்ணீர், சர்க்கரை, ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களைச் சேர்த்து சுவையான லஸ்ஸி தயாரிக்கலாம்.
  • மீதமுள்ள தயிருடன் தேன், பழச்சாறு மற்றும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பழங்களைச் சேர்த்து ஐஸ் க்ரீம் தயாரிக்கும் பாப்சிகல் மோல்டுகளில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு சாப்பிடலாம். ஆரோக்கியமான ஐஸ் க்ரீமாக இருக்கும்.
  • அதேபோல தயிர் குழம்பு, நீர் மோர், உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.
  • மண் பானையில் தயாரிக்கப்படும் கம்பங்கூழ், வரகுக் கூழ் உள்ளிட்டவைகளுடன் தயிர் மற்றும் சின்ன வெங்காயம் பச்சையாக போட்டு குடிக்கலாம். இது உடல் சூட்டை தனிப்பதுடன் உடலுக்கு தேவையான நீர் சத்தையும், ஆற்றலையும் வழங்குகிறது.

இதுபோன்று வீட்டில் மீதமான தயிரை வீணாக்காமல் உங்களுக்கு படித்தமான மாற்று உணவிற்கு இதை உடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் ஆரோக்கியமும் நலன் பெறும்.

இதையும் படிங்க:லேடீஸ் ஹேண்ட் பேக் சீக்ரெட்.. உள்ள என்னென்ன இருக்கனும் தெரியுமா.?

ABOUT THE AUTHOR

...view details