தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

விதைப்பை வலியை அசால்ட்டாக விடாதீர்கள்! - ஆண்கள் விதைப்பை

நாம் டிஜிட்டல் உலகை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் காட்டிவருகிறோம். அவற்றில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது ஆண்களுக்கு ஏற்படும்  விதைப்பைப் பிரச்சினை (Testicular pain).

testicular
testicualr

By

Published : Jul 12, 2021, 6:03 PM IST

விதைப்பையில் ஏற்படும் வலி உங்களுக்குக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இந்த விதைப்பை வலி சில சமயங்களில் தீவிரமானதாகவும் இருக்கலாம். எந்த வயதினரையும் பாதிக்கும். லேசான வலியைக் கண்டுகொள்ளாமல் விடும்போது நாள்பட்ட பாதிப்பாக மாறிவிடுகிறது.

கடுமையான டெஸ்டிகுலர் வலி (acute testicular pain)

கடுமையான டெஸ்டிகுலர் வலி என்பது விதைப்பை பகுதியில் வீக்கம் ஏற்படுவது அல்லது சிவந்து காட்சியளித்தல் ஆகும்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக பொது அறுவை சிகிச்சை வல்லுநர் அல்லது சிறுநீரக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

விதைப்பை கிழிசல்

விதைப்பை முறுக்கப்பட்டு, விந்தணுக்களுக்கு ரத்த விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது திசுக்களைப் பாதிக்கிறது. விதைப்பை வீங்கி 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். 20 முதல் 30 வயதுக்குள்பட்ட ஆண்களில் இந்தநிலை மிகப் பொதுவாகக் காணப்படுகிறது.

மற்ற காரணிகள்

Epididymitis - விதைப்பையில் விந்தணுக்களைக் கொண்டுசெல்லும் டியூபில் ஏற்படும் வீக்கம்.

Scrotal Trauma - விதைப்பையில் காயம் ஏற்படும்போது அதன் தடினமான வெளிப்புறத் தோல் கிழிந்து ரத்தம் கசிகிறது. இது சில சமயங்களில் தொற்று பாதிப்புக்கு வழிவகுக்கிறது.

நாள்பட்ட விதைப்பை வலி

இந்த வலி பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இளம் வயது ஆண்களிடையே அதிகளவில் பார்த்திட முடியும்.

இந்த வலி ஏற்படுவதன் காரணங்கள்

விதைப்பை புற்றுநோய் - ஒன்று அல்லது இரண்டு விந்தணுக்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. புற்றுநோய்க் கட்டிகள் வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய்க் கட்டிகளை உடனடியாக அடையாளம்கண்டு நீக்க வேண்டும்.

இடுப்புப் பகுதியைச் சுற்றி மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளும் காரணமாக அமையும்.

பாதிப்பைக் கண்டறியும் முறைகள்

ஸ்க்ரோட்டல் டாப்ளர் சோதனை

அல்ட்ராசவுண்ட்

தொற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் விந்து கல்சர் சோதனை

சிகிச்சை முறை

பாதிப்பின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை எப்போதும் கடைசி வழியாகும்.

தற்காப்பு நடவடிக்கைகள் :

இரண்டு வாரங்களுக்கு இறுக்கமான உள்ளாடை அணிய முயற்சிக்கவும்

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை விந்தணுவை வெளியேற்றுவதன் மூலம் வலியைக் குறைத்திட முடியும்.

ABOUT THE AUTHOR

...view details