இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சினையாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. பள்ளி பருவத்தில் பாடம் புரியவில்லை என்பதால் தொடங்கும் மன அழுத்தம், வேலைக்கு சேர்ந்ததும் இரண்டு மடங்கு ஆகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்கவேண்டும் என்ற கண்டிஷனில் பணியாற்றுகையில், மன அழுத்தம் கூடுதல் ஆகிறது. அதிக மன அழுத்தமானது ஒருவருக்கு மன ரீதியாக மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. உடல் ரீதியாகவும் பிரச்சினையை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதிக மன அழுத்தம் முதுகு வலியைத் தூண்டுகிறது. மக்கள் பலர் தீராத முதுகு வலி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் மன அழுத்தம் தான் இருக்கிறது. இதனைச் சரிசெய்திட யோகா பயிற்சி சரியான தீர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களுக்காக பிசியோதெரபிஸ்டும், யோகா ஆசிரியருமான டாக்டர் ஜான்வி கத்ரானியை அணுகினோம்.
யோகா மூலம் முதுகுவலியைத் தீர்க்கும் வழிகள்:
யோகா கலந்தாய்வு: ஆலோசனை பெறுவதன் மூலம் மன அழுத்தம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
கிளின்ஸிங் பிராசஸ்(Cleansing processes): கபல்பதி (நுரையீரலின் கீழ்ப் பகுதியைச் சுத்தம் செய்தல்), ஜலா நேட்டி (நாசி பாதையை உப்பு நீரில் சுத்தம் செய்தல்), வாமன் தவுஹாத்தி (நுரையீரலைச் சுத்தம் செய்வது, குறிப்பாக வயிற்றின் அமிலத்தை நீக்குதல்), ஷாங்க் பிரக்ஷலானா (குடல்கள் மற்றும் நச்சுக்களை சுத்தம் செய்தல்) என நான்கு வகையான கிளினிங் வழிகள் உள்ளன.