சென்னை:தாய்மை என்பது ஒரு இனிமையான உணர்வு.பெண்ணிற்கு ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு போன்றது.இந்த நேரத்தில தான் நீ ரொம்ப கவனமாக இருக்கனும், கண்டதையெல்லாம் சாப்பிடக்கூடாது, நீ ஒரு உயிர் இல்ல, ரெண்டு உயிர். இரண்டு உயிருக்கும் சேர்த்து தான் சாப்பிடனும் என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். அப்படியான வேளையில் கர்பிணிகள் உணவு கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மாறிவரும் காலச்சூழல் மற்றும் நவீன உணவுமுறை ஆகியவற்றால் தற்போது, சுகப்பிரசவங்களும் அரிதாகிவிட்டன. ஆரோக்கியமான குழந்தை பிறப்பு அரிதாகிவிட்டன. வயிற்றில் உள்ள குழந்தைக்கும், தாயின் நலத்திற்கும் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இப்போது கர்ப்பக்காலத்தில் பெண்கள் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
ஜிங்க் நிறைந்த உணவுகள்:வயிற்றில் குழந்தை சத்தாக வளர்வதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது. கர்பிணிகள் ஒரு நாளைக்கு தனது உணவில் 12 மில்லி கிராம் அளவிலான ஜிங்க்கை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது ஜிங்க் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பாதாம் பருப்பு (Almonds):ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 0.9 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாமை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடலாம்.
முந்திரி பருப்பு (Cashews):ஒரு அவுன்ஸ் முந்திரி பருப்பில் 1.6 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. முந்திரியில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் செம்பு, மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவற்றை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.