தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

இந்தியர்களை அதிகளவில் குறிவைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்... விரிவான தகவல்கள் இதோ!

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இதய நோய்க்குப் பிறகு உலக சுகாதார பிரச்னையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்டியோபோரோசிஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் விவரித்துள்ளோம்.

oate
oste

By

Published : Oct 20, 2020, 2:46 PM IST

உடலில் உள்ள எலும்புகள் தான் முக்கிய உறுப்புகளை பாதுகாக்கின்றன மற்றும் காயங்களிலிருந்து விலக்கி வைக்கின்றன. எனவே, எலும்பு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எலும்பு அடர்த்தியை இழந்துவிட்டால் எதிர்காலத்தில் பெறுவது கடினம்‌ என்பதால் பாதுகாப்பாக கையாள வேண்டும். முறையற்ற உணவு முறைகள், சில சுகாதார நிலைமைகள் தான் பலவீனமான எலும்புகள் மற்றும் எலும்பு காயங்களுக்கு வழிவகுக்கிறது.

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் (WOD) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இது ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஆஸ்டியோபோரோசிஸ் இதய நோய்க்குப் பிறகு உலக சுகாதார பிரச்னையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோய் பாதிப்பு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகமாக உள்ளது. தற்போது, ​​இந்தியாவில் சுமார் மூன்று கோடி பேர் ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது. பெரும்பாலும் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு நோயாகும். இது உடல் அதிக எலும்புகளை இழக்கும்போது, ​​மிகக் சிறிய எலும்புகளை உருவாக்கும் போது ஏற்படக்கூடும். இதன் விளைவாக, எலும்புகள் பலவீனமடைந்து உடைந்து போகும். சில கடுமையான சந்தர்ப்பங்களில் ஒருவர் இருமல் அல்லது தும்மினாலும் கூட எலும்புகள் உடைந்து போக வாய்ப்புள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள்:

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்

உடற்பயிற்சி இல்லாதது

புகைப்பிடித்தல்

நீரிழிவு நோய்

எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு ஆகும்.

ஆஸ்டியோபோரோசிஸின் அறிகுறிகள்:

இந்த நோயின் அறிகுறி பல நாள்களுக்கு பிறகு இடுப்பு, முதுகெலும்பு அல்லது மணிக்கட்டில் வலி ஏற்படும் போது தான் தெரியக்கூடும்‌. சில பொதுவான அறிகுறிகள்:

பலவீனமான ஈறுகள்

தாடை எலும்பு பலவீனமாகுதல்

நகங்களில் பலவீனம் ஏற்படும்

முதுகெலும்பு சுருங்கி ஒருவரின் உயரம் வளர்ச்சி தடைப்படுதல்

எலும்பு முறிவுகள்

இது தவிர, நிலையான முதுகுவலி, உடலில் சோர்வு, எந்த வேலையும் செய்ய சிரமம், கை, கால்களில் வலி போன்ற அறிகுறிகளும் வரக்கூடும்.

ஆரோக்கியமான எலும்புகளுக்கான உணவு

ஆரோக்கியமான எலும்புகளை பெற கால்சியம் மற்றும் வைட்டமின் டி முக்கியமானது ஆகும். அதன்படி, தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) யு.கே பரிந்துரைத்த சில உணவுகளின் பட்டியல் கிழே உள்ளன:

கால்சியம்

பால், சீஸ் மற்றும் பிற பால் உணவுகள்

ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ்

சோயா பீன்ஸ்

சோயா பானங்கள்

நட்ஸ்

ரொட்டி

குறிப்பாக கீரையில் ஏராளமான கால்சியம் இருப்பதாகத் தோன்றினாலும், இதில் ஆக்சாலிக் அமிலமும் உள்ளது, இது கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கிறது, எனவே கீரை மட்டும் சாப்பிட கூடாது.

வைட்டமின் டி

மீன்

முட்டை

தானியங்கள்

பால் வகைகள்

ஓட்ஸ், ஆரஞ்சு ஜூஸ், காளான்கள் ஆகியவை சாப்பிடலாம்

எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை நல்ல எலும்பு ஆரோக்கியத்தை உறுதிசெய்யும், இது ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்படுவதைத் தடுத்திட முடியும்.

ABOUT THE AUTHOR

...view details