ஐதராபாத் : நீரிழிவு நோய் உடலின் பல பாகங்களை பாதிக்கின்றது. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் துவாரங்கள், பற்கள் மற்றும் ஈறுகளில் பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தோன்றும் வாய் பிரச்சனைகளில் சில நீரிழிவு நோயை மோசமாக்குகிறது. எனவே, உங்களின் பற்கள் மற்றும் ஈறுகளை கவனித்துக்கொள்வது அவசியமாகும். உங்கள் வாயை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
நீரிழிவு நோய் எவ்வாறு வாயை பாதிக்கிறது
உமிழ்நீர் வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. உமிழ்நீரில் வாயில் உள்ள திசுக்களைப் பாதுகாக்கவும், பல் சிதைவை எதிர்த்துப் போராடவும் உதவும் தாதுக்கள் உள்ளன. நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்து பொருள்களால் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகள் குறைவான உமிழ்நீரை உருவாக்குகிறது. உமிழ்நீர் குறைவாக சுரப்பதால் பல் துவாரங்கள், ஈறு நோய் மற்றும் பிற வாய்ப் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயினால் ஏற்படும் வாய்ப் பிரச்சனைகள்:
ஈறு நோய்:தீவிரமான வாய்ப் பிரச்சனையாகும். இதனால் ஈறுகளில் சிவப்பு, வீக்கம், எரிச்சல், இரத்தப்போக்கு, வாய் துர்நாற்றம் மற்றும் கடுமையான பல் இழப்பு ஆகியவை ஏற்படும்.
வறண்ட வாய்:நீரிழிவு நோய் உமிழ்நீர் சுரக்கும் அளவை குறைப்பதற்கு வழிவகுக்கிறது. இதனால் வாய் வறட்சி ஏற்படும். உமிழ்நீர் பற்றாக்குறையால் புண்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும். மேலும், துவாரங்கள் மற்றும் விழுங்குவதில் சிரமம் உண்டாகும்.