கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட பரிசோதனையை மாண்டிஃபியோர் சுகாதார அமைப்பும், ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியும் இணைந்து செய்து வருகின்றன.
இந்த சோதனைக்கு ஏசிடிடி 2 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனம் சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதத்தில் நியூயார்க்கிலிருந்து முதல்முதலாக மாண்டிஃபியோர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ரெம்டேசிவிர் மருந்தை கண்டறிந்தனர். இந்த மருந்துகள் மூலம் கரோனா நோயாளிகள் 11 நாள்களிலேயே குணமடைந்தனர். ஆனால் இந்த மருந்தை பயன்படுத்தப்பட்டவர்களின் மீட்பு விழுக்காடு குறைவாகவே இருந்தன. இதனால் பல்வேறு மருந்துகளுடன் இணைந்து ரெம்டேசிவிர் மருந்தினை ஆய்வு செய்ய தொடங்கப்பட்டது.
இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்தோடு ப்ளேஸ்போ மருந்து இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. ப்ளேஸ்போ மருந்து உடல் இணைப்புகளில் ஏற்படக்கூடிய வலிகளைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெம்டேசிவர் மருந்துடன், ப்ளேஸ்போ மருந்தினை ஒன்றாக இணைத்து ஆய்வு செய்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் சைட்டோகைன் புயல்களை குறைக்குமா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் இயக்குநரான டாக்டர் சிங்மேன் பேசுகையில், ''எங்களுக்கு கவலை என்னவென்றால், கரோனா வைரஸ் பாதிப்பைக் காட்டிலும் நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அபாயகரமானவை. அதனால் கரோனா வைரஸிற்கு இதுவரை எவ்வித மருந்து சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றார்.
ரெம்டேசிவிர், ப்ளேஸ்போ மருந்துகள் மூலம் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன. அதனால் அதன் இரண்டையும் இணைத்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால் இது மக்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க:ரெம்டெசிவிர் மருந்தால் வேகமாக குணமாகும் கோவிட்-19 நோயாளிகள்...!