தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மாரடைப்பு வரப்போகுதா... அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்: நிபுணர்கள் கூறுவது என்ன?

மாரடைப்பிற்கு முன்பு வரவிருக்கும் ஆபத்து குறித்து இதயம் பல சமிக்ஞைகளை அனுப்பும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 18, 2023, 5:42 PM IST

லக்னோ (உத்தரப்பிரதேசம்):இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, காற்று மாசு, தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்பெல்லாம் வயது முதிர்ந்த நபர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு இன்றைய காலத்தில் சிறு வயது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்குக் கூட வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் கூறிய தகவலைப் பார்க்கலாம்.

மேதாந்தா மருத்துவமனையின் மூத்த இதயநோய் நிபுணரான டாக்டர் நகுல் சின்ஹா பேசுகையில், மக்கள் உடல் சோர்வு மற்றும் கால்வீக்கம் உள்ளிட்ட சில காரணிகள் நீண்ட நாள் இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசுகையில், உங்கள் இதயம் பாதிக்கப்படுகிறது அல்லது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான அறிகுறிகளை தெரியப்படுத்தும் எனவும், அதை கவனித்து போதுமான சிகிச்சை எடுத்தால் உயிர் தப்பித்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக சோர்வு, மூச்சுத் திணறல், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வேலைகளைச் செய்ய இயலாமை, காரணமின்றி எடை அதிகரிப்பு, கால்களில் வீக்கம், இவை அனைத்தும் உங்கள் இதயப் பிரச்சனையில் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும். அத்தகைய அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள் எனவும்; மாரடைப்பு திடீரென ஏற்படலாம் என்றும், ஆனால் இதய பாதிப்பு படிப்படியாகத்தான் ஏற்படும் எனவும் கூறியுள்ளார், மருத்துவர் நகுல் சின்ஹா.

மேலும், உங்கள் இதயத்தில் பிரச்சனை இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும் எனவும்; மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டால் சிகிச்சை அளிப்பது கடினம் எனவும் கூறியுள்ள மருத்துவர் நகுல் சின்ஹா, முன்பெல்லாம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே காணப்பட்ட இதய செயலிழப்பு இன்றைய காலகட்டத்தில் 60 வயதிற்கும் குறைவானவர்களிடம் காணப்படுவதாகக் கூறினார்.

இதற்கு முக்கியக் காரணம் இதயம் செயலிழக்கிறது என்றால் அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும்போது மக்கள் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த மாரடைப்பு குறித்து பேசியுள்ள பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் மன்சூர் ஹசன், இதய செயலிழப்பு என்பது உடலுக்குத் தேவையான ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலைதான் எனக் குறிப்பிட்டார். மேலும் தனக்கு பத்து வருடங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்; உடனே சிகிச்சை பெற்றதால் 86 வயதில் உங்கள் முன்னாள் உட்காந்திருக்கிறேன் எனவும் கூறினார். இதய செயலிழப்புக்கு ஆரம்ப கட்டத்தில் தெரியும் அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவது அவசியம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க:ஆயுள் கூட வேண்டுமா இதை மட்டும் சாப்பிடுங்க: மருத்துவர்கள் கூறும் மந்திரக்கனி..!

ABOUT THE AUTHOR

...view details