அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் (Aligarh Muslim University) இதுகுறித்தான விவாதம் நடைப்பெற்றது. அதில் உடல் பருமன் மற்றும் ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பருமனை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் தாரிக் மன்சூர், "வாழ்க்கை முறையினால் ஏற்படும் உடல் பாதிப்புகளை குணப்படுத்துவதற்கு பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவத்தை இணைத்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டு்ம்.
இருப்பினும் இந்த முறைகளை அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக அபாயகரமான வெகு நாள்கள் இருக்கும் நோய்களுக்கு பயன்படுத்தமுடியாது. கரோனா தொற்று பரவியதிலிருந்து பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை அரசு ஊக்குவித்து வருகிறது" என்றார்.
ஆயுர்வேத முறைபடி உடல் பருமனுக்கான சிகிச்சை, தடுப்பு முறைகள் குறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (All India Institute of Ayurvedic, New Delhi) பணியாற்றும் பேராசிரியர் ஜோனாஸ் பேசினார். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மற்றும் தினசரி உணவில் மாற்றம் ஆகியவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்றார்.
ஆயுர்வேத மருத்தும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து, மன அழுத்தத்தை குறைப்பது, சீரான வாழ்க்கை முறையை கவனத்தில் கொள்வதால், பலர் உடல் எடையை குறைக்க முற்படும்போது ஆயுர்வேத உணவு கொள்கைகளையும் இயற்கை வைத்தியங்களையும் கவனத்தில் கொள்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் ஆயுர்வேத மருத்துவத்தையும், சிகிச்சையையும் மக்கள் அவர்களின் சுகாதாரத்தில் ஒரு பங்காக கருதுகிறார்கள்.