டெல்லி:மிதமான கரோனா சிகிச்சைக்கு பயன்படும் ஃபவிபிராவிர் மருந்தை ஜென்பர்க் நிறுவனம் 39 ரூபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு அட்டையில் 10 மாத்திரைகள் இருக்கும் என்றும் அதன் திறன் அளவு 200மில்லி கிராமாக இருக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மருந்து உற்பத்தி ஆலை தெலங்கானாவில் செயல்ப்பட்டு வருகிறது.
முன்னதாக பிரிண்டன் மருந்து நிறுவனம் இம்மாத்திரையை ஃபாவிடான் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு 59 ரூபாய் என அதிகப்பட்ச விலைக் நிர்ணயம் செய்து வெளியிட்டது.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
அதேபோல் மும்பையில் செயல்படும் முன்னணி மருந்து நிறுவனமான க்ளென்மார்கும், இம்மருந்தை ஃபாபி-ஃப்ளூ என்ற பெயரில் 75 ரூபாய்க்கு சந்தைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.