தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

இது காதலா, உணர்ச்சியா... அறிவீர்களா? அன்பு காதலர்களே! - காதலா? உணர்ச்சியா?

காதலரோ, தம்பதியோ அன்பிற்கும் உணர்ச்சி சார்புக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து உண்மையான காதலை உணர்ந்துள்ளீர்களா அல்லது கடந்து சென்றுவிடுகிறீர்களா? நீங்கள் உண்மையாக காதலிக்கிறீர்கள் என்றால், அதனை இங்கு சோதனை செய்துவிட்டுச் செல்லுங்கள். முற்றிலும் இலவசம்!

love or emotional dependency
love or emotional dependency

By

Published : Dec 5, 2020, 9:54 AM IST

Updated : Dec 6, 2020, 2:15 PM IST

'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது' பொதுவான காதல் வசனம், அனைவரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அது உண்மையான காதலின் வெளிப்பாடு எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது வெறும் உணர்ச்சியைச் சார்ந்தது மட்டுமே காதல் அல்ல! என்று நாங்கள் சொன்னால் நம்புவீர்களா?

நீங்கள் இல்லாமல், உங்களின் அவனோ, அவளோ வாழ முடியாது, வாழ்க்கையில் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என நீங்கள் நினைக்கும்போது உணர்ச்சி உங்களைக் கட்டுப்படுத்திவிடுகிறது. அதாவது உணர்ச்சியின் பிடியில் நீங்கள் இருக்கும்போது, உங்களின் துணையின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தல், ஒவ்வொரு செயலிலும் துணையாக இருத்தல், அவர்களின் கருத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளுதல், ஆதரவு தெரிவித்தல் உள்ளிட்டவையை செய்துவிடுவீர்கள்.

அதுதானே காதல் என நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், காதலுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு உள்ளது என்பது ஆய்வுகளின் கருத்து. காதலுக்கும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவது மிகவும் நுட்பமானது. ஏன் சற்று கடினம் என்றும் சொல்லலாம்.

  • காதலில், உங்கள் துணை யாருடன் பேசினாலும், பழகினாலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால், உணர்ச்சி சார்பில், துணையின் அன்பை யாராவது தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ எனத் தோன்றும். அடிக்கடி பொறாமைப்படுவீர்கள். அப்போதுதான் வேதாளம் முருங்கை மரம் ஏறும், அல்லது துணையைக் கண்டிக்க ஆரம்பிப்பீர்கள், அச்சுறுத்துவீர்கள்.
  • காதல், ​​உங்கள் துணையை முழுமையாக நம்பவைக்கும். உன்னுடைய காதல் பாதுகாப்பாகத்தான் உள்ளது, வேறு வேலையை கவனி என ஆறுதல் அளிக்கும். காதலில், நீங்கள் வாழ்வீர்கள், வாழ விடுவீர்கள். ஆனால் இந்த உணர்ச்சி சார்பு இருக்கிறதே, உங்களையும் மனஅழுத்தத்தில் ஆழ்த்தும், துணையின் தூக்கத்தையும் கெடுக்கும். காதலிக்கும்போது, ​எல்லா செயலிலும் திருப்தியும் ஆனந்தமும் அடைவீர்கள். ஆனால் உணர்ச்சியில், "இது இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்". அவ்வளவு தானா? இது இன்னும் சிக்கல்கள் தான்.
  • காதலில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அடக்கமாகவும் இருப்பீர்கள். அனைத்து செயல்பாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படும். ஆனால் உணர்ச்சியில், நீங்கள் உணர்ச்சிகரமாகவும், மிகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். இருங்கள் அதேபோல கவலையைும், ஏமாற்றத்தையும் அதிகமாக உணர்வீர்கள். குறிப்பிட்டுச் சொன்னால், நீங்கள் உணர்ச்சியின் பிடியிலிருக்கும்போது, எப்போதும் சந்தேகங்கள் மனத்தில் குடிகொண்டிருக்கும். அதுவும் பொதுவான சந்தேகம் அல்ல, இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என இயற்கை விதிகளுக்கு மாறான சந்தேகப் பேரொலியாக மாறிவிடுவீர்கள். அதற்காக உங்களின் துணை உங்களைத் தவிர வேறு யாருடனும் நெருக்கமாக இல்லை என உத்தவாதம் அளிக்க வேண்டும் என விரும்புவீர்கள். ஆனால் காதலில், இது நேர்மாறானது காதலர்களே. துணையை விடுங்கள், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணருவீர்கள், ஏனென்றால் உங்கள் துணை உங்களை மட்டும்தான் நேசிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?
  • காதலில், நீங்கள் இருவரும் ஒருவர்தான். எளிமையாகச் சொன்னால், இரு உயிர் ஓர் உடல். இந்தச் சூழலில் இருக்கும்போது, நீங்கள் ஒருவருக்கொருவர் கனவுகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்வீர்கள். ஏன் அவர்களுக்காக நீங்கள் உங்களின் ஆசைகளைக்கூட மறந்துவிடுவீர்கள். ஆனால், உணர்ச்சியில் அப்படியா? நீ ஏன் எனக்காக இதுகூட பண்ணல, எனக்காக வாழ மாட்டியா, அப்பப்ப அன்றாடம் பார்க்கும் சங்கதிதான் மிஞ்சும். வாழ்வதை நிறுத்துவீர்கள். சண்டையில் காலம்போகும். விவாகரத்துக்கூட ஆகலாம் திருமணம் ஆகியிருந்தால்.
  • காதலில், நீங்கள் நேர்மறையாகச் சிந்திப்பீர்கள். உணர்ச்சி, எதிர்மறை எண்ணங்களில் உங்களை மூழ்கடிக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் காதல் இருக்கும்போது, ​​நேர்மறை உணர்வு நிரம்பி வழிகிறது. நீங்கள் ஆற்றலுடையவராக உணர்வீர்கள். வாழ்க்கையை வாழ ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் உணர்ச்சிவசமாக இருக்கும்போது, ​யாராவது வந்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்வார்கள் என எதிர்பார்ப்பீர்கள். ஏனெனில் உங்களிடம் வெறுமை இருக்கும். உங்கள் மன அமைதி கெட்டுவிடும். யாராவது உங்களை காப்பற்றட்டும் அல்லது உணர்ச்சியிலிருந்து வெளிவந்து, காதலியுங்கள் அன்பு காதலர்களே.

இதையும் படிங்க: 20ஆவது திருமண நாள்: காதல் அனுபவத்தை பகிர்ந்த டக்லஸ்

Last Updated : Dec 6, 2020, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details