தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? கூடாதா?.. அமெரிக்க அளித்த அதிர்ச்சி தகவல்!

Is it good or bad for diabetics to eat eggs daily: தினமும் முட்டை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கும் என அமெரிக்கா கண்டறிந்துள்ளது.

Is it good or bad for diabetics to eat eggs daily in tamil
சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:42 PM IST

சென்னை:தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு முட்டையில் 7 கிராம் புரதம் இருப்பதால், உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கும். அதனால் தான் கிராமங்களில் பூப்படைந்த பெண்களுக்கு முட்டையை உணவாகக் கொடுப்பர். உடல் பலவீனம் என்று மருத்துவமனைக்குச் சென்றாலும், மருத்துவர்கள் முட்டை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவர். இதிலிருந்து முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அறியலாம்.

நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?:ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அனைவர் மனத்திலும் எழுகிறது. இதைப் போக்க அமெரிக்கா ஒரு ஆய்வு நடத்தியது. அமெரிக்காவின் நீரிழிவு அமைப்பு (ADA - American Diabetes Association) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முட்டை உண்ணலாமா? என்று ஆய்வு நடத்தியது.

இதையும் படிங்க:How to whiten your teeth naturally: பற்கள் மஞ்சளா இருக்கா? கரை இருக்கா? முத்துப்போன்ற பற்களைப் பெற இதை ட்ரை பண்ணுங்க.!

அமெரிக்காவின் ஆய்வு என்ன சொல்கிறது: இந்த ஆய்வு 20 ஆயிரத்து 703 ஆண்களுக்கும், 36 ஆயிரத்து 295 பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் தினமும் முட்டை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் ஒரு நாளைக்கு 300 கிராமை விட குறைவான கொழுப்பை சாப்பிட வேண்டும் என்று அமெரிக்க நீரிழிவு அமைப்பு (ADA) அறிவுறுத்தியுள்ளது. ஒரு முட்டையில் கருவில் 185 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது மனிதன் தினமும் உட்கொள்ள வேண்டிய கொழுப்புச்சத்தில் பாதிக்கும் மேல் முட்டையில் உள்ளது. அதிகமான கொழுப்புச்சத்து உள்ள முட்டை தினமும் அதாவது வாரத்தில் 7 நாட்கள் சாப்பிடும் போது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மேலும் அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பாதிப்பு ஆண்கள், பெண்கள் என்றில்லாமல் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாரத்தில் 7 நாட்களும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கின்றது. தினமும் என்றில்லாமல் வாரத்தில் 3 முதல் 5 நாட்கள் முட்டை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கண்களுக்குப் போடும் மேக்கப்பால் கண் பார்வைக்கு ஆபத்தா? என்ன செய்யலாம்.?

ABOUT THE AUTHOR

...view details