தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கரோனா கவச்: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!

கரோனா கவச் திட்டத்தின் காப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையாகும். சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீட்டில் 5 விழுக்காடு சலுகை அளிக்க வேண்டும். அத்துடன் அனைத்துப் பிரிவினரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்கும் வகையில் பிரீமியம் கட்டணத்தைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா காப்பீடு
கொரோனா காப்பீடு

By

Published : Jul 12, 2020, 7:07 AM IST

டெல்லி: கரோனா தாக்குதலில் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையிலான, ‘கோவிட் கவச்’ எனும் காப்பீட்டுத் திட்டத்துக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஜூலை 11ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு நிறுவனங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கான காலம் 105 நாள்கள் முதல் 285 நாள்கள் வரையாகும். காப்பீட்டின் கட்டணம் ஒரே அளவாக அனைத்து நிறுவனங்களும் நிர்ணயிக்க வேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ. தெரிவித்துள்ளது. அனைத்துப் பொது காப்பீடு நிறுவனங்களும் இத்திட்டத்தை ஜூலை 10ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

வேலை இழந்துவிட்டீர்களா...? வேலையின்மைக் காப்பீடு உங்களுக்கு உதவும்!

காப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையாகும். சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீட்டில் 5 விழுக்காடு சலுகை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துப் பிரிவினரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்கும் வகையில், கட்டணத்தைக் குறைவாக நிர்ணயிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சைக்கான செலவு, காப்பீடு எடுக்கும்போது நோய்த் தொற்று இருந்தாலும் அவர்களுக்கும் காப்பீடு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோருக்கு, அதற்காகும் மருத்துவச் செலவையும் இந்தக் காப்பீடு எடுத்தவர்களுக்கு 14 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் தற்போது கோவிட்–19 சிகிச்சைக்கு இழப்பீடு கோரிவருகின்றனர். இதுவரை 8 ஆயிரத்து 500 பேருக்கு இழப்பீட்டுத் தொகையைக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இழப்பீடு கோருவோர் எண்ணிக்கை குறைவுதான் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐஓஎஸ் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன?

கரோனா தொற்று பரிசோதனை, சிகிச்சை செலவை உங்களின் மருத்துவக் காப்பீடு உள்ளடக்கியுள்ளதா? தனியார் மருத்தவமனைகளின் கட்டணம் குறித்து கவலைப்பட வேண்டுமா? 100 விழுக்காடு கட்டண செலவையும் உங்கள் காப்பீடு நிறுவனம் திருப்பி அளிக்குமா? இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கோவிட்-19 சிகிச்சைக்கு புதிதாக மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டுமா?

அவசியமில்லை. எல்ஐசி, ஓரியன்டல் இன்சுரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஆதித்யா பிர்லா, ஹெச்டிஎஃப்சி எர்கோ போன்ற பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் தற்போதைய காப்பீட்டிலேயே, கூடுதல் பிரிமீயம் கட்டணமின்றி, கோவிட்-19 சிகிச்சையைச் சேர்த்துள்ளன. கோவிட்-19 காரணமாக ஏற்படும் மரணத்திற்கும் இழப்பீட்டுத் தொகையை எல்ஐசி உள்ளடக்கியுள்ளது. இவை மரணத்திற்கான பிற காரணங்களுடன் இணையாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

ஐசிஐசிஐ லம்பார்ட் கோவிட்-19 காப்பீடு அம்சங்கள்

கோவிட்-19 முதல் அறிகுறி சிகிச்சையையும் காப்பீடு உள்ளடக்கியுள்ளது. சுகாதார உதவி, மருத்துவ ஆலோசனை போன்ற கூடுதல் சேவைகளும் உள்ளடக்கியது. அவசர ஊர்தி சேவை, தொலைபேசி ஆலோசனை ஆகியவற்றைக் கூடுதல் கட்டணம் செலுத்தி காப்பீட்டில் இணைக்கலாம்.

அதிதிறன் கொண்ட குறைந்த விலை போக்கோ எம்2 ப்ரோ வெளியீடு...!

மருத்துவமனையில் சேர்க்கை இல்லையென்றாலும், காப்பீட்டுத் தொகையின்படி முழுத் தொகையையும் காப்பீடு பெற்றவருக்கு நிறுவனம் அளிக்கும். ஆனால், OPD அல்லது மருத்துவமனை பில்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற இயலாது.

75 வயது வரை காப்பீடு பெறலாம். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் கோவிட்-19 தொற்று உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கோவிட்-19 தொற்று பரவும் முன் அறிகுறி தென்பட்டவர்கள் அல்லது 14 நாள்களுக்கு காத்திருக்கும் காலத்தில் இருந்தவர்கள், காப்பீடு தொடங்கிய முதல் 14 நாள்களில் இழப்பீடு பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு இது பொருந்தாது.

ஸ்டார் கரோனா காப்பீடு அம்சங்கள்

  • காப்பீடு தொகை பொறுத்து காப்பீடு அமையும்.
  • 74 வயது வரை உள்ளவர்கள் நாவல் கரோனா காப்பீடு பெறலாம்.
  • கோவிட்-19 தொற்று தவிர பிற நோய்களுக்கு, நிறுவனம் காப்பீடு அளிக்காது. காப்பீடு தொடங்கும் முன் தொற்று அறிகுறி இருந்தாலோ அல்லது காத்திருப்பு காலத்தில் தொற்று ஏற்பட்டாலோ காப்பீடு தொகை வழங்கப்பட மாட்டாது.
  • தனி நபர்கள் இரண்டு காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக்கும் வசதி– ரூ.21,000 மற்றும் ரூ.42000, இதற்கான பிரீமியம் தொகை ரூ.299 மற்றும் ரூ.598 ஆகும் (வரி நீங்கலாக)
  • கூடுதல் விவரங்களுக்கு: 1800 425 2255 / 1800 1024477 அல்லது support@starhealth.in.

கோவிட் சிகிச்சையின் 100 விழுக்காடு செலவை உங்கள் காப்பீடு ஈடுசெய்யுமா?

இல்லை. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களின்படி, ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உங்கள் காப்பீட்டின் ஒப்பந்தம் படி, சிகிச்சையின்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவச் செலவுகள் (தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சிகிச்சை உட்பட) குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.

மனித தொடர்பில்லாமல் டெலிவரி செய்யும் ரோபோட்ஸ்!

மேலும், ஐஆர்டிஏஐ வழிகாட்டுதலின்படி சிகிச்சை தொகை, காப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக இருந்தால், மீதமுள்ள கூடுதல் கட்டணத்தைக் காப்பீடு பெற்றவரே ஏற்க வேண்டும்.

கோவிட் சிகிச்சையின் எந்த பகுதி காப்பீட்டிற்கு உட்பட்டது?

தனிநபர் காப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தின் அடிப்படையில், மருத்தவமனை சேர்க்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டணங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவமனை தனிமைப்படுத்தல் (ஒரு மருத்துவரால் சான்றளிக்கப்பட்டவை) ஆகியவற்றைப் பெரும்பாலான காப்பீடு திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் தொற்று கண்டறிதல் பரிசோதனை, மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருள்கள், தொற்று அறிகுறி அல்லாத கோவிட்-19 உறுதிசெயய்ப்பட்ட நபர்கள் ஆகியோர்கள் மருத்துவமனை அனுமதியில்லையெனில், தற்போதுள்ள காப்பீடு திட்டத்தில் பயன்பெற இயலாது.

தும் தும்... கூடுதல் பாஸ் தொழில்நுட்பத்துடன் வெளியான சோனியின் இயர்பட்ஸ்!

கர்ப்பிணிகளுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதியில்லையெனில், டெலிவரி முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவச் செலவுகளை காப்பீட்டில் பெற இயலாது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், ஐசிஐசிஐ லம்பார்ட் அளிக்கும் சிறப்பு கோவிட்-19 காப்பீட்டின் கீழ், மருத்துவமனை சேர்க்கை இல்லையென்றாலும், முழுக் காப்பீட்டுத் தொகையையும் (ரொக்கமாக) பெற முடியும்.

நோயாளியைச் சார்ந்துள்ளவருக்கு தொற்று ஏற்பட்டால், தற்போதைய காப்பீட்டில் அவரும் பயன்பெற இயலுமா? இதில் வரம்புகள் ஏதேனும் உள்ளதா?

ஆம். காப்பீட்டில் அவர் பெயரும் இணைக்கப்பட்டிருந்தால், அவருக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைச் செலவுகளையும் திரும்பப் பெற இயலும். காப்பீட்டிலுள்ள வரம்புகள் இதற்கும் பொருந்தும்: மருத்துவமனை சேர்க்கை அல்லாமல், தொற்று இல்லை என சிகிச்சை முடிவில் அறியப்பட்டால், பரிசோதனை செலவுகளைத் திரும்பப்பெற இயலாது.

இப்போது மருத்துவக் காப்பீடு எடுக்க இயலுமா? காத்திருப்பு காலம் உள்ளதா?

ஆம். இப்பொழுதும் மருத்துவக் காப்பீடு பெறலாம். ஆனால், காத்திருப்பு காலமான 15 முதல் 30 நாள்களில், உங்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை பெற இயலாது. இது காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோவிட்-19 சேர்க்கப்பட்டுள்ளதா?

ஆம். ஆயுஷ்மான் பாரத்தின் கீழ், மத்திய அரசு ஐந்து திட்டங்களை வகுத்துள்ளது. கோவிட்-19 தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை இதில் சேர்க்கப்பட்டுள்ளது: கடுமையான காய்ச்சல், அறியப்படாத பைரெக்ஸியா, நிமோனியா, கடுமையான நிமோனியா, சுவாசக் கோளாறு (நிமோனியா, ஆஸ்துமா, சிஓபிடி, ஏஆர்டிஎஸ், விஷம், தலையில் காயம் போன்றவை) மற்றும் வகை 1 அல்லது 2 சுவாசக் கோளாறு.

நிலநடுக்கத்திலும் சீறிப்பாயும் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்திய ஜப்பான்!

இதைத் தவிர, நோயாளியின் உடல்நலத்தைப் பொறூத்து, மருத்துவமனை பிற பேக்கேஜ்களையும் சேர்க்கக்கூடும் என பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகியவற்றிற்கான கூடுதல் கட்டணங்களை மாநில அரசு வரையறுக்கும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் யார் யார் பயன் பெறலாம்?

ஆயுஷ்மான் பாரத் வலைதள தகவலின்படி, இருப்பிடம் – நகர்புறம் அல்லது கிராமப்புறம் ஆகியவற்றைப் பொறுத்து பயனாளிகள் வகைப்படுத்தப்படுவர்.

நகர்ப்புற பயனாளிகள்:

  • பாதுகாப்புக் காவலர், பழைய பொருள்கள் சேகரிப்பவர்கள், எலக்ட்ரீசியன், மெக்கானிக், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தோட்டக்காரர்கள், தூய்மைப் பணியாளர்கள், தையல்காரர்கள், கைவினைத் தொழிலாளர்கள்
  • காலணி தைப்பவர்கள், சாலையோர வணிகர்கள், வீதி வீதியாகச் சென்று விற்பவர்கள்
  • மேஸ்திரிகள், பிளம்பர்கள், போர்ட்டர்கள், ஓவியர்கள், வெல்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், இதே போன்ற பிற போக்குவரத்து தொழிலாளர்கள்
  • சிறு அலுவலகத்தில் பணிபுரியும் பியூன், உதவியாளர்கள், சிறிய கடை நடத்துபவர்கள், டெலிவரி ஆட்கள், உணவகத்தில் பணிபுரியும் வெய்ட்டர்கள்

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

  1. https://mera.pmjay.gov.in/search/login வலைதளத்திற்கு செல்லுங்கள்
  2. உங்கள் மொபைல் எண்ணை பதிவுசெய்யவும்
  3. பிரத்யேக எண்ணை (captcha code) பதிவு செய்யவும்
  4. ‘OTP ஐ உருவாக்கு’ என்பதை கிளிக் செய்யவும்
  5. நீங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெயர், HDD எண், மொபைல் அல்லது ரேஷன் அட்டை எண் என ஏதோவது ஒன்றைப் பதிவிட்டுத் தேடவும்.

ஆயுஷ்மான் பாரத் உதவி எண் 14555 அல்லது 1800 111 565 ஆகியவற்றை அழைத்து தகுதியுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் உள்ளதா?

ஆம். கோவிட்-19 பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

  • கோவிட்-19 பணியின்போது விபத்து அல்லது கோவிட்-19 மூலமாகவோ உயிரிழப்பு நேர்ந்தால், விபத்து காப்பீடு.
  • கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களை பராமரிக்கும் அல்லது அவர்களுடன் நேரடியாக செயல்பட வேண்டிய சமூக சுகாதார ஊழியர்கள் உட்பட பொதுச் சுகாதார வழங்குநர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வருவர்.
  • மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள்/அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், AIIMS, INIs அல்லது மத்திய அரசுத் துறை கீழ் செயல்படும் மருத்துவனைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், ஓய்வுபெற்றவர்கள், தன்னார்வலர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்த/தினசரி கூலித் தொழிலாளர்கள், தற்காலிக / அவுட்சோர்ஸ் ஊழியர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் வருவர்.
  • காப்பீட்டின் காலம் 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு இருக்கும்.
  • தனி நபராக இதில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் காப்பீட்டின் முழு பிரீமியம் தொகையையும் மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்படும். பிற காப்பீடு இருப்பினும் இந்தத் தொகை வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கான குழுவாக எடுக்கப்படும் காப்பீடு உள்ளதா?

தற்போதுள்ள காப்பீடு கோவிட்-19ஐ உள்ளடக்கியது. புதிதாக குழு காப்பீட்டிற்கு, காப்பீடு நிறுவனத்தை அணுக வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்காக, காம்போசிட் காப்பீட்டு தரகர் எடெல்விஸ்-கல்லாகர், முறைசாரா துறை மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் குழு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.

அந்நிறுவனத்தின் செய்தி அறிக்கைப்படி, உணவு டெலிவரியில் உள்ளவர்கள், முறைசாரா தொழிலாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்காள், சுகாதார வழங்குநர்கள், மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் பலர், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரூ.50,000 முதல் ரூ.50 லட்சம் வரை மருத்துவமனை சேர்க்கையுடனான சிகிச்சைக்கு தனி பயனாக்கப்பட்ட காப்பீட்டை எடெல்வைஸ் வழங்குகிறது. இத்திட்டத்தைப் பற்றி மேலும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details