தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

முத்தத்தில் இத்தனை வகைகளா? - 90's கிட்ஸ்

தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாடுவது உத்தமம். இல்லை மொரட்டு சிங்கிள்ஸ் 90's கிட்ஸ் பாவம் சும்மா விடாது. இன்று சர்வதேச முத்த தினம். இந்தக் கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பாதுகாப்பாக முத்த தினம் கொண்டாடுவது குறித்து பார்க்கலாம்.

International Kissing Day 2021
International Kissing Day 2021

By

Published : Jul 6, 2021, 12:06 PM IST

Updated : Jul 7, 2021, 9:35 AM IST

ஹைதராபாத் : நெருங்கி வா முத்தமிடாதே.. இந்த வாசகத்தை சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் நாம் பார்த்திருப்போம். இதன் அர்த்தம் மோதிக்கொள்ளக் கூடாது என்பதே. அதேபோல் பிரபல பற்பசை விளம்பரம் ஒன்றும் நெருங்கி வா நெருங்கி வா எனக் காதல் சூடேற்றும்.

சரி சரி.. புரிகிறது. நாம் இப்போது விஷயத்துக்கு வருவோம். இன்று சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. என்னடா சொல்றீங்க... இதெற்கெல்லாம் ஒரு தினமா? அதுவும் இந்தக் கரோனா காலத்துல...

காற்றுல பரவுது, நடந்தா பரவுது, நின்னா பரவுது, கூட்டமா கூடினா பரவுது என்று சொல்லிட்டு, இப்போ முத்த தினமா கேட்குது என்று சில பெரியவர்கள் சாபம் விடுவதையும் என்னால் உணர முடிகிறது. முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. அந்த முத்தத்தில் பல வகை உண்டு. தாய் குழந்தைக்கு கொடுத்தால் அரவணைப்பு, காதலன் காதலிக்கு கொடுத்தால் அரண் அமைப்பு என அது நீள்கிறது.

பொதுவாக தலையில் கொடுக்கும் முத்தம் அன்பையும், கன்னத்தில் கொடுக்கும் முத்தம் பாசத்தையும், கைகளில் கொடுக்கும் முத்தம் சகோதரத்துவத்தையும் குறிக்கிறது.

'முத்தம் கிடைக்குமா...’ நடுவானில் ஆடையைக் கழற்றி அதிர்ச்சியளித்த பயணி!

இதழில் கொடுக்கும் முத்தம் வள்ளுவன் கூறிய முப்பாலில் மூன்றாம் பால் என்றால் மிகையல்ல. உங்களுக்கு தெரியுமா? இருவரும் மனமுவந்து உதட்டில் கொடுக்கும் முத்தம் பல விதமான நல்ல இரசாயன மாற்றங்களை இருவரின் உடலுக்குள்ளும் ஏற்படுத்துமாம். இதனால் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

முத்தம் தோன்றிய வரலாறு

முத்தங்கள் உருவான விதம் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன. பழங்காலத்தில் குருவிகள் போலவும், விலங்குகள் போலவும் மனிதர்கள் குழந்தைகளுக்கு உணவளித்தார்களாம்.

அப்போது குழந்தை அழுதால் குழந்தையின் வாயின் அருகே வாயை வைத்த போது குழந்தை அழுகையை நிறுத்தியதாம். இவ்வாறு முத்தக் கலாசாரம் பரவியதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா

மற்றொறு கதையும் உண்டு. பெண்கள் கன்னத்திலும், ஆண்களின் கன்னத்திலும் வெவ்வேறு விதமான உப்புச் சுவை உள்ளதாம். இதிலிருந்துதான் முத்தம் நமக்கு சொந்தமானது என்றும் சிலர் கூறுகிறார்.

முத்த தினம் முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றியது. அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி சர்வதேச முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. இதுமட்டுமின்றி ஜூன் 22 மற்றும் காதல் தின வாரத்திலும் முத்த தினம் கொண்டாடப்படுகிறது.

அன்பையும் அக்கறையையும் தங்களின் இணையருக்கு வெளிப்படுத்த முத்தத்தை விட சிறந்த வழி இருக்க முடியாது. அந்த முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. அது ஒருவரின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும். உறவுகளை வலுப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

முத்தம் குறித்த சில தகவல்கள்

  1. ஒரு நிமிடம் முத்தமிட்டால், உடலில் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒருவர் தினமும் முத்தமிட்டால், அந்த நபரின் வயதும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
  2. பிரெஞ்ச் கிஸ் செய்யும் போது வாய் சுத்தமாக இருப்பது அவசியம். இல்லையெனில் 10 விநாடி முத்தமிட்டால் கூட 80 லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாற்றம் நடைபெற்றுவிடும்.
  3. முத்தம் மன அழுத்தத்தை குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
  4. சராசரியாக ஒரு நபர் 336 மணிநேரத்தை முத்தத்தில் செலவிடுகிறார், இது நம் வாழ்வின் இரண்டு வாரங்களுக்கு சமம் ஆகும்.
  5. இடைக்காலங்களில் மக்கள் கடிதம் எழுதும்போது கையொப்பமிட்டு முத்தமிட்டு அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்தக் கலாசாரம் மேற்கத்திய நாடுகளில் இன்றளவும் காணப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற காட்சிகள் நிறைய எடுக்கப்பட்டுள்ளன.
  6. உலகில் சுமார் 75 சதவீத மக்கள் தங்களின் செல்லப்பிராணிகளை முத்தமிடுகிறார்கள். மக்கள் அதிகமாக முத்தமிட விரும்பும் செல்லப்பிராணிகள் பட்டியலில் நாய் 70 சதவீதத்துடன் முதலிடத்திலும், பூனைகள் 21 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மீதமுள்ள 7 சதவீதம் பேர் பறவைகளையும், இரு சதவீதம் பேர் ஊர்வன உள்ளிட்ட விலங்குகளையும் முத்தமிட விரும்புகின்றனர்.
  7. முதல் முறையாக 1966 ஆம் ஆண்டில் ஸ்டார் ட்ரெக்கின் என்ற நிகழ்ச்சியில் சர்வதேச முத்த தின நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன.

தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாடுவது உத்தமம். இல்லை மொரட்டு சிங்கிள்ஸ் 90's கிட்ஸ் பாவம் சும்மா விடாது!

இதையும் படிங்க : முத்தம் கிடைக்குமா?- ரசிகர் கேட்ட கேள்விக்கு கேஷுவலாக பதில் சொன்ன ஜான்வி

Last Updated : Jul 7, 2021, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details