தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? சர்வதேச மகிழ்ச்சி நாளன்று தெரிந்துகொள்வோம்! - மகிழ்ச்சி பட்டியல்

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக மக்களின் மனநிலை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையிலும், மன அழுத்தம், எதிர்கால நிச்சயமற்ற தன்மையின் மத்தியிலும் சில நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளது மகிழ்ச்சிப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி

By

Published : Mar 20, 2021, 8:38 PM IST

மாற்றம் என்பது மாறாத ஒன்று. அதேபோல்தான், மகிழ்ச்சியைத் தேடி மனிதர்கள் அலைந்துகொண்டே இருப்பார்கள். அதை மாற்ற முடியாது. கடந்த ஓராண்டு காலமாக, பெருந்தொற்றால் ஏற்பட்ட அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றின் மத்தியில் நம் மகிழ்ச்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு வாழ்ந்துவருகின்றோம்.

இந்தநிலையில், சர்வதேச மகிழ்ச்சி நாளான இன்று, நாமும் சிரித்து மற்றவர்களை மகிழ்விப்போம். வெளிச்சத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ நினைக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதை இன்றைய நாளின் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

இது குறித்து ஐநாவின் சர்வதேச மகிழ்ச்சி நாளின் நிறுவனரான ஜெய்ம் இல்லியன் கூறுகையில், "2021ஆம் ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி நாளின் மையப் பொருளாக 'அனைருக்கும் எப்போதும் மகிழ்ச்சி' என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிநபர், அமைப்பு, சமூகம், நாடு என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற சிறப்பான ஒற்றை நோக்கத்திற்காக மனித குலத்தை ஒன்றிணைக்க வேண்டும். இயற்கையோடு நல்லிணக்கத்தைப் பருகுவதோடு பூமியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தவதை இலக்காக அடைய வேண்டும்" என்றார்.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த அறிக்கையில், "கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்ட விவரங்களே ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக வெளியிடப்படுகிறது. மாதிரி அளவை அதிக்கப்படுத்தவும் மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் இதனை மேற்கொண்டுவருகிறோம்.

2018 முதல் 2020 வரையிலான காலத்தின்கீழ் குறிப்பிடப்பட்ட 10 நாடுகளே மகிழ்ச்சியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஃபின்லாந்து
  • டென்மார்க்
  • சுவிட்சர்லாந்து
  • ஐஸ்லாந்து
  • நெதர்லாந்து
  • நார்வே
  • ஸ்வீடன்
  • லக்சம்பேர்க்
  • நியூசிலாந்து
  • ஆஸ்திரியா

2020ஆம் ஆண்டு, லக்சம்பேர்க் நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2018-19 ஆண்டுக்கான கணக்கெடுப்பின் அடிப்படையில் பட்டியில் இடம்பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக மக்களின் மனநிலை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையிலும், மன அழுத்தம், எதிர்கால நிச்சயமற்றத் தன்மையின் மத்தியிலும் சில நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளது மகிழ்ச்சி பட்டியலில் தெரியவந்துள்ளது.

"இந்தாண்டு, கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் உலக நாடுகள் எப்படி மகிழ்ச்சியாக இருந்துள்ளது குறித்த அறிக்கையை எதிர்பார்த்திருப்பது சுவாரஸ்யமாகவுள்ளது. ஓராண்டுக்கான மாதிரியை வைத்து கணக்கிடுவது என்பது அளவில் மிகச்சிறியது.

சிறப்பான நாடுகளுக்கிடையேயான இடைவெளி குறைவாகவுள்ளது. புள்ளிவிவரத்தை கருத்தில் எடுத்துக்கொண்டு பார்த்தால் அண்டை நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் முக்கியமற்றது. அதன் முதல் பத்து நாடுகளைப் பார்ப்போம்" என மகிழ்ச்சிக்கான நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஃபின்லாந்து
  • ஐஸ்லாந்து
  • டென்மார்க்
  • சுவிட்சர்லாந்து
  • நெதர்லாந்து
  • ஸ்வீடன்
  • ஜெர்மனி
  • நார்வே
  • நியூசிலாந்து
  • ஆஸ்திரியா

149 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ள பாகிஸ்தான் 105ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. 84ஆவது இடத்தை சீனா பிடித்துள்ளது.

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நம்மையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒரு சிலவற்றை கீழே குறிப்பிடுகிறோம்.

நன்றியுணர்வுடன் இருப்பது!

வாழ்க்கையில் உங்களுக்கு என்ன கிடைத்ததோ அதை வைத்துக்கொண்டு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். அதற்காக உங்களை நீங்களே பாராட்டி கொள்ள வேண்டும். உங்களிடம் இல்லாததை நினைத்து எண்ணினால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நன்றியுடன் இருக்க பழக வேண்டும். எதற்கெல்லாம் நன்றி உணர்வுடன் இருக்கிறமோ, அதுகுறித்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை தினமும் எழுத வேண்டும்.

வெளிச்சத்தைத் தேடி!

நம்பிக்கையாக இருப்பது குறித்து அடிக்கடி பேசுவது உண்டு. ஏனெனில், நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழ்க்கையில் ஏதேனும் துன்பகரமாக நடந்தால், மனம் உடைந்து போகாமல் அதிலிருந்து கற்றுக்கொண்டு வளர முயற்சிக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும். வாழ்க்கையின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுத் தருகிறது. எனவே, அதில் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் கருணையாக இருத்தல்!

வேகமான அழுத்தம் மிகுந்த உலகத்தில் உங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கருணையை காட்ட மறந்து விடக்கூடாது. மூர்க்கமாக இல்லாமல் அனைவரையும் மதிப்புடன் நடத்த வேண்டும். ஏனெனில், அவர்கள் எம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. மகிழ்ச்சியாக இருந்து மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

தியானம்!

தியானம் செய்வதன் மூலம் நீங்கள் அமைதி அடைவீர்கள் உங்கள் மனநிலை சீராகும். உங்களின் எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தின்போது நன்றியுணர்ச்சியைப் பேணுங்கள். உங்கள் அழுத்தம் குறைந்த மகிழ்ச்சியாக இருக்க தியானம் வழிவகுக்கும்.

இதைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்க 20 வழிகளை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

  • உடற்பயிற்சி
  • தடைகளை உடை
  • நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
  • சமூக அளவில் இணைந்திருங்கள்
  • உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்
  • மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
  • உங்களின் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு சக்தி இருப்பதை உணருங்கள்.
  • மகிழ்ச்சியை பழக்கமாக்குங்கள்
  • அவசியமற்றதை ஒதுக்குங்கள்
  • பரந்த மனப்பான்மையுடன் இருங்கள்
  • உங்களை நீங்களே கொண்டாடுங்கள்

இந்த ஏழு பழக்கங்களை தின பழக்கமாக மாற்றும் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

  1. கவனம் செலுத்தும் திங்கள்கிழமை
  2. நன்றி உணர்வு செலுத்தும் செவ்வாய்க்கிழமை
  3. உடல் நலன் மிக்க புதன்கிழமை
  4. சிந்தனை ஓட்டம் நிறைந்த வியாழக்கிழமை
  5. சுதந்திரமான வெள்ளிக்கிழமை
  6. சமூகத்திற்கான சனிக்கிழமை
  7. ஆத்மார்த்தமான ஞாயிற்றுக்கிழமை

ABOUT THE AUTHOR

...view details