தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

வாஷிங் மெஷின இப்படித்தான் யூஸ் பண்றீங்களா? தப்பாச்சே.. இனிமே இப்படி ட்ரை பன்னுங்க.! - துணி துவைப்பது

வாஷிங் மெஷினில் ஆடைகளை சலவை செய்யும்போது நாம் பல்வேறு தவறுகளை செய்கிறோம். அதை சரி செய்வதற்கான வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 2:26 PM IST

சென்னை:நம்மில் பலர் வீடுகளில் கைகளால் துணி துவைக்கும் பழக்கத்தில் இருந்து வாஷிங் மெஷின்களை நம்பி வாழ ஆரம்பித்து விட்டோம். அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்து செய்யும் கடினமான சூழலை இந்த வாஷிங் மெஷின்கள் கொஞ்சம் குறைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆனால் நம்மில் பலர் வாஷிங் மெஷினில் துணிகளை எப்படி துவைப்பது என்ற சரியான புரிதல் இல்லாத காரணத்தால், பல்வேறு தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் துணிகள் விரைவாக வெளிர்ந்து போவது, இத்துப்போவது, நூல் எழும்பி பழைய துணிகள்போல் காட்சி அளிப்பது, ஒரு துணியின் நிறம் மற்ற துணிகளில் பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதை எப்படி சமாளிக்கலாம்? எந்த துணிகளை எப்படி துவைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெரிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

துணிகளை துவைக்கும் வழிகாட்டு நெரிமுறைகளை ஏழாக பிரிக்கலாம் அவை;

  • துணிகளை பிரித்துக்கொள்வது
  • சலவைக்கான சுழற்சியை சரியாக தேர்வு செய்வது
  • சலவைக்கான தண்ணீரை தேர்வு செய்வது
  • வாஷிங் பவுடர் அல்லது வாஷிங் ஆயில் மற்றும் ஃபேப்ரிக் சாஃப்டனர்களை சேர்ப்பது
  • வாஷிங் மெஷினின் எடைக்கு தகுந்தவாறு துணிகளை போடுவது
  • வாஷிங் மெஷினை ஆன் செய்து இயங்க செய்வது
  • வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது

1. துணிகளை பிரித்துக்கொள்வது:

  • துணிகளை நிறம் மற்றும் தரம் வாரியாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
  • துணிகளின் சலவை பராமரிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.
  • ஸ்டோன் வொர்க் அல்லது மென்மையான துணிகளுக்கு சலவை பைகளை (mesh bag) பயன்படுத்துங்கள்.

இவற்றை நீங்கள் பின்பற்றி ஆடைகளை பிரித்து சலவை செய்யும் பொழுது உங்கள் ஆடைகள் சேதம் அடையாமல் தவிர்க்க முடியும்.

2. சலவைக்கான சுழற்சியை சரியாக தேர்வு செய்வது:உங்கள் ஆடைகள் துவைக்கப்பட வேண்டிய சுழற்சியை தேர்வு செய்யுங்கள். இது உங்கள் ஆடைகளை ஊற வைப்பது, துவைப்பது, அலசுவது மற்றும் வெளியேற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உங்கள் ஆடைகளில் அதீத அழுக்கு இருந்தால் அதற்கு தகுந்தவாறும், இல்லை என்றால் அதற்கு தகுந்தவாறும் சலவை சுழற்சியை தேர்வு செய்யுங்கள்.

3. சலவைக்கான தண்ணீரை தேர்வு செய்வது:

உங்கள் துணிகளை சலவை செய்வதற்கான தண்ணீரை தேர்வு செய்யுங்கள்.

சூடான தண்ணீர் பயன்படுத்த வேண்டிய துணிகள்:

  • கெட்டியான துணிகள்
  • படுக்கை விரிப்புகள்
  • போர்வைகள்
  • சமையலறை பயன்பாட்டு துணிகள்
  • குளியலறை பயன்பாட்டு துணிகள்
  • மிதி அடிகள்
  • அதீத அழுக்குப் படிந்த துணிகள்

சாதாரண தண்ணீர் பயன்படுத்த வேண்டிய துணிகள்:

  • அன்றாடம் உடுத்தும் ஆடைகள்
  • அழுக்கு குறைவாக உள்ள ஆடைகள்
  • மெல்லிய ஆடைகள் உள்ளிட்டவை

நீங்கள் தண்ணீரை இப்படி தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம், துணிகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் அடைவதையும், ஆடைகள் சேதம் அடையாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும். சாதாரண ஆடைகளை நீங்கள் சூடான தண்ணீரை பயன்படுத்தி அதிகம் துவைத்தால் விரைவில் இற்றுப்போகும்.

4. வாஷிங் பவுடர் அல்லது வாஷிங் ஆயில் மற்றும் ஃபேப்ரிக் சாஃப்டனர்களை சேர்ப்பது:

உங்கள் துணிகளை சலவை செய்வதற்கான சோப்பு பவுடரோ அல்லது சோப்பு ஆயிலோ எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் துணிகளின் அடர்த்தி, வாஷிங் மிஷினில் பின்பற்ற வேண்டிய சோப்பின் அளவு, துணிகளின் பராமரிப்பு வழிகாட்டுதல்கள் மூன்றையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதற்கு ஏற்ற அளவில் சோப்பு பவுடரோ அல்லது சோப்பு ஆயிலோ பயன்படுத்துங்கள். அதேபோல்தான் ஃபேப்ரிக் சாஃப்டனர்களும். சோப்பு பவுடராக இருந்தால் தண்ணீரில் கலந்து சேர்ப்பது நல்லது. சோப்பு பொடி, சோப்பு ஆயில் அல்லது ஃபேப்ரிக் சாஃப்டனர் எதுவாக இருந்தாலும் ஆடைகளில் நேரடியாக படும்படி போடக்கூடாது. அது உங்கள் ஆடைகளில் படிந்து, படியும் இடத்தை மட்டும் வெளிருப்போகச் செய்யும.

5. வாஷிங் மெஷினின் எடைக்கு தகுந்தவாறு துணிகளை போடுவது:உங்கள் வாஷிங் மெஷினின் எடையை கணக்கில்கொண்டு அதற்கு தகுந்தவாறு ஆடைகளை போடுங்கள். அதீத எடை ஏற்படும் அளவுக்கு ஆடைகளை மெஷினில் திணித்தால் அது உங்கள் சலவை பாதிக்கப்படலாம்.

துணிகள் துவைக்கப்படாமலும் போகலாம். அது மட்டும் இன்றி வாஷிங் மெஷின் விரைவில் பழுதடையவும் செய்யும். மேலும், துணிகளை வாஷிங் மெஷில் போடுவதற்கு முன்பு அதில் ஊக்கு, நாணயம் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதை அகற்றி விட்டு துணிகளை துவைக்க வேண்டும்.

  1. ஸ்மால் லோடு வாஷிங் மெஷின்: ⅓ டிரம் வரை
  2. மீடியம் லோடு வாஷிங் மெஷின்: ½ டிரம் வரை
  3. லார்ஜ் லோடு வாஷிங் மெஷின் : ¾ டிரம் வரை

6. வாஷிங் மெஷினை ஆன் செய்து இயங்க செய்வது:

அதன் பிறகு வாஷிங் மெஷினை ஆன் செய்து இயங்க செய்ய வேண்டும். அதற்கு முன்பு வாஷிங் மெஷினின் கதவுகளை சரியாக அடைத்துள்ளீர்களா? ஆடைகள் போட்டது முதல் தண்ணீரை தேர்வு செய்தது உள்ளிட்ட அனைத்தையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

7. வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது: இந்த செயலை நம்மில் பலர் செய்வதே இல்லை. வாஷிங் மெஷினை நீங்கள் சுத்தம் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தினால் அதில் சோப்பின் படிவங்கள் தேங்கி உங்கள் துணிகள் துவைக்கப்படுவதின் தூய்மையை பாதிக்கும். மேலும் தோல் தொடர்பான நோய்கள் வரவும் காரணமாக அமைந்து விடும். இதனால் வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்:வாஷிங் மெஷினில் ஒரு கப் வினிகர் மற்றும் ஒரு கப் பளீச் லிக்விட் ஊற்றி, மிஷினை ஆன் செய்து சலவை செய்ய அனுமதியுங்கள். சூடான நீர் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. அதன் பிறகு உலர்ந்த நல்ல காட்டன் துணிகொண்டு வாஷிங் மெஷினின் உள் பக்கம் மற்றும் வெளிப்புறம் என துடைத்து கிளீன் செய்ய வேண்டும். இப்படி பராமரிப்பதன் மூலம் உங்கள் துணிகள் பாதிப்படைவது மற்றும் தோல் நோய் ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க:Diwali 2023: தீபாவளிக்கு வீட்டை எப்படி அலங்கரிக்கலாம்.. சின்ன ஐடியா.. இதை ட்ரை பண்ணுங்க.!

ABOUT THE AUTHOR

...view details