தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

How To Reduce Waist Size in Tamil: தொப்பையைக் குறைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்கள்..கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.! - உடலில் கொழுப்பு குறைய என்ன செய்ய வேண்டும்

உடலில் உள்ள கொழுப்பு குறைந்து அடிவயிறு தொப்பை குறையவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 2:27 PM IST

Updated : Sep 27, 2023, 2:43 PM IST

சென்னை:ஆரோக்கியம் அற்ற வாழ்வியல் நடைமுறை மற்றும் உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் பிடித்த உடை அணிவது முதல் சாதாரணமான வாழ்வியல் நடைமுறையை மேற்கொள்வதில் கூட சிக்கல்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு சேர்வதால் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிகமும் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகப் பெண்களுக்கு பிசிஓடி பிரச்சனை ஏற்பட்டு குழந்தை பிறப்பு மற்றும் மாதவிடாய் பிரச்சனை, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அது மட்டும் இன்றி ஆண், பெண் என இரு பாலருக்கும் இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு படிவதன் காரணமாக இருதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட பலவேறு வகையான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இடுப்பின் அளவு ஏன் முக்கியமானது, அது எவ்வளவு இருக்க வேண்டும்;இடுப்பைச் சுற்றி உடலின் உள்பாகத்தில் கொழுப்பு படிவதன் மூலம் குறிப்பாக அடி வயிற்றுப் பகுதியில் கொழுப்புப் படிவதால் அது உங்கள் உடல் உருப்புகளின் செயல்பாடுகளைப் பாதிப்படையச் செய்யும். இது நீரிழிவு நோய்க்கு நூறு சதவீதம் வழிவகை செய்யும். உடல் நிறை குறியீட்டெண் கணக்கெடுப்பின்படி ஒரு மனிதனின் இடுப்பின் சுற்றளவு என்பது அவரது உயரத்தில் பாதியாக இருக்க வேண்டும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் உயரம் 170cm இருக்கிறது என்றால், உங்கள் இடுப்பின் அளவு 85cm க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இடுப்பின் அளவை குறைக்க நினைக்கிறீர்களா..இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்;ஒருவர் தனது ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இடுப்பின் அளவை குறைக்க நினைக்கிறார் என்றால் முதலில் அவர் கவனத்தில் கொள்ள வேண்டியது.. உடற்பயிற்சி, உணவு முறை, மன அழுத்தம் மற்றும் தூக்கம் இந்த நான்கு விஷயங்களில் சமமான கருதல் வேண்டும்.

உடற்பயிற்சி; உடற்பயிற்சி என்பது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற மிகுந்த உதவி புரிகிறது. ஆரம்பத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது நீங்கள் சில சிரமங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் மெது மெதுவாக உங்கள் உடற்பயிற்சியை நாள்தோறும் முன்னெடுங்கள். அதனைத் தொடர்ந்து உங்கள் உடல் உடற்பயிற்சியின் பலனுக்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கும். அதற்குக் குறைந்த பட்சம் 45 நாட்கள் வரை எடுக்கலாம். இடுப்பைச் சுற்றி உள்ள கொழுப்புகளை அகற்ற சர்க்யூட் உடற்பயிற்சி மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதனுடன் நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, வியர்வை சொட்ட நடைப்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவை சிறந்த பலன் தரும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உட்கொள்ள வேண்டிய உணவு;

  • உங்கள் அன்றாட உணவில் அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை நீக்கினால், அது உங்கள் ஆரோக்கியமான வாழ்கையை உறுதி செய்யும்.
  • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எதுவும் இல்லாத சர்க்கரை பானங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
  • தண்ணீர் நிறைந்த பழங்கள் உதாரணத்திற்கு வாட்டர்மெலன் உள்ளிட்டவற்றை உட்கொள்ளுங்கள்
  • உங்கள் வீட்டில் நொறுக்குத் தீனியைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தை முதலில் அகற்றுங்கள். நொறுக்குத் தீனி உட்கொள்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாவதைத் தூண்டும்.
  • காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் உணவை நேரத்திற்குச் சரியாக உட்கொள்ள வேண்டும்.
  • உணவு உட்கொள்ளும்போது மனதை அமைதியாக வைத்து கவனத்துடன் சாப்பிட வேண்டும்
  • ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்
  • புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
  • அதீத மது மற்றும் புகைப் பழக்கம் உங்கள் உடல் பருமன் மட்டும் இன்றி ஆரோக்கியத்தையும் கேள்விக் குறியாக்கும்
  • உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு முன்பு ஊட்டச்சத்து நிபுணரை அணுகிப் பரிந்துரை பெறுவது சிறந்தது

அமைதியான மனநிலையை நிர்வகியுங்கள்; மன அழுத்தம் உங்கள் எடை உயர்வை ஊக்குவிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' கார்டிசோலினின் அளவை உயர்த்துகிறது. இந்த ஹார்மோனுக்கும் வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் நீங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரந்து இடுப்பைச் சுற்று கொழுப்பு படியக் காரணமாக அமையும்.

நீங்கள் மன அழுத்தத்துடன் காணப்படுகிறீர்கள் என்றால் முடிந்தவரை நீங்களே உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் நம்பகத் தன்மைக்கு உரிய நண்பர்களிடம் பேசி அமைதியடையுங்கள் இல்லை என்றால் மருத்துவரை அணுகி மன அழுத்தம் குறைவதற்கான சிகிச்சையைப் பெருங்கள். இத்தனை விஷயங்களையும் உங்கள் வாழ்க்கை நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்ற ஆரம்பித்தால் உடல் பருமன் மற்றும் தொப்பை அற்ற ஆரோக்கியமான வாழ்வும், மகிழ்ச்சியான தருணங்களும் உங்களைத் தேடி வரும்.

இதையும் படிங்க:பத்தே நாளில் முகம் பளபளனு ஜொலிக்கனுமா? இதுதான் பெஸ்ட்..

Last Updated : Sep 27, 2023, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details