சென்னை: ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். புதிதாக ஒருவரை காணும்போது, அவரின் ஆடையை வைத்தே அவரை மதிப்பிடுவோம். அதனால்தான் ‘கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்பார்கள். நாள்தோறும் நாம் உடுத்திச் செல்லும் துணிகளில் அழுக்குகள், கறைகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி, கிருமிகளும், பாக்டீயாக்களும், துர்நாற்றமும் தோன்றுகின்றன.
எதற்காக ஃபேப்ரிக் கண்டிஷ்னர்?துணிகளை துவைக்கும்போது அழுக்குகள் மற்றும் கறைகளை நீக்க மெனக்கெடுவதைப்போல, பாக்டீரியாக்களை ஒழித்து, நல்ல மணமாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பலர் இதற்காக ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களை (Fabric Conditioner) உபயோகப்படுத்துகிறோம். சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களை உபயோகப்படுத்தும்போது சிலருக்கு தோலில் எரிச்சல், தோல் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னரால் ஏற்படும் தீமைகள்:சந்தைகளில் விற்கப்படும் ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களின் பயன்பாட்டிற்கு பதிலாக, இயற்கை வாசனை திரவியங்களைப் பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னர்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள், சருமம் அல்லது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது மட்டுமில்லாமல் சுவாச பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
இயற்கையானஃபேப்ரிக் கண்டிஷ்னர் செய்வது எப்படி?அதனால் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், அதாவது ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்னை இருப்பவர்கள் வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவர். இயற்கையான வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்தும்போது, மனதிற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது. இதை வீட்டிலேயே செய்யலாம்.