சென்னை:பண்டிகை நாட்களை இனிப்பு இல்லாமல் கொண்டாட முடியாது, அதுவும் தீபாவளி என்றாலே முக்கிய பங்கு பலகாரத்திற்கு தான். மற்ற நாட்களில் சாப்பிடுவதை விட தீபாவளியின் போது விதவிதமாக, அளவுக்கு மீறி இனிப்புகளை நாம் சாப்பிடுவதுண்டு. இதனால் அஜீரணம் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில், நிறைய இனிப்புகளும் சாப்பிடனும், வயிற்றையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ளனும் என்றால் இந்த தீபாவளி லேகியத்தை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
தீபாவளிக்கு பலாகரம் செய்ய தொடங்கியதும் கையோடு இந்த தீபாவளி லேகியத்தையும் செய்து விடுங்கள். அப்போது தான் தீபாவளியின் போது நன்றாக இனிப்புகளை சாப்பிட்டு எந்த விதமான உடல் உபாதைகளும் இன்றி, தீபாவளியை கொண்டாடமுடியும்.
லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:
- தனியா - கால் கப்
- சுக்கு - 10 கிராம்
- கிராம்பு - 4
- சித்தரத்தை - 10 கிராம்
- சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- கண்டந்திப்பிலி - 10 கிராம்
- அரிசி திப்பலி - 10 கிராம்
- வெல்லத்தூள் - 100 கிராம்
- தேன் - அரை கப்
- நெய்- 1 கப்
- ஓமம் -1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். பின் கனமான பாத்திரத்தை எடுத்து அதில் நெய், வெல்லத்தூள், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். பின் அதனை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.