காய்கறிகள் முதல் தாய்பால் வரை எல்லாமே விஷம் ஆகிவிட்ட உலகில் நாம் வாழுகிறோம். நாம் சுவாசிக்கும் காற்று முதல் உண்ணும் உணவு வரை அனைத்தும் அசுத்தம் ஆகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் எழுந்துள்ளது.
அனைத்து தடைகளையும் மீறி உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் பசுமை புரட்சியின்போது நாம் ரசாயனங்களை உபயோகிக்கத் தொடங்கினோம். அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி கண்மூடித்தனமாக அவைகளை உபயோகித்ததால் உணவு மாசுபட்டுவிட்டது மற்றும் வேளாண் விளைபொருள்களில் உள்ள ரசாயனங்களின் எச்சங்கள் தாய்பாலிலும் கலந்துவிட்டது. பொது சுகாதாரப் பாதுகாப்பிலும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
உயர் விளைச்சலுக்காக வளம் குறைந்த நிலங்களில் கண்மூடித்தனமாக ரசாயனங்களை தூவ வேண்டும் என்ற நோக்கம் தடுக்கப்படவேண்டும். பாதுகாப்பான உணவுக்காக இயற்கை வேளாண்மையை நோக்கிய வீட்டுத் தோட்டத்தை அமைக்க வேண்டிய தேவை மக்களுக்கு தற்போது எழுந்துள்ளது.
ரசாயனங்களால் ஏற்படும் பேரழிவு
ரசாயனங்களை கண் மூடித்தனமாக உபயோகப்படுத்துவதில் இருந்து பெரும் அளவில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும், ரசாயனங்களை உபயோகிப்பது என்பது எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. அறிவியல் பூர்வமற்ற வகையில் ரசாயனங்களை உபயோகிப்பதால் சூற்றுச்சூழல் மாசுப்படுகிறது. மண்ணின் வளத்தில் சீராக அழிவு ஏற்படுகிறது.
மண் வளத்தைப் பாதுகாக்க கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு மண்வளப் பரிசோதனை அட்டை அறிமுகம் செய்த போதிலும் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதிக யூரியா உரம் உபயோகித்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற தவறான கருத்தால் தேவையில்லாமல் விவசாயிகள் ரசாயனத்தை உபயோகிப்பதால், மண்ணின் வளம் குறைந்து விடுகிறது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் நிலத்தின் மண்ணை பரிசோதனை செய்து அந்த மண்ணில் உள்ள நுண்ணூட்டசத்துகளுக்கு ஏற்ப தகுந்த ரசாயன உரங்களை அளிக்க வேண்டும். அவர்கள் ஏதேனும் மண் ஆய்வு செய்யவில்லை என்றாலோ அல்லது அக்கறையற்ற வகையில் சோதனை செய்திருந்தாலோ அவையெல்லாம் உண்மையில் பலன் தருவதாக இருக்காது.
உதாரணத்துக்கு மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கும்போது அவர்கள் உரம் உபயோகிக்கத் தேவையில்லை. ஆனால், வழக்கமான முறையில் அவர்கள் உரங்களைத் தூவினால், மண்ணில் அவற்றின் அளவு அதிகரித்து விடும். அதனால் எந்தப் பலனும் கிடைக்காது. விளைச்சல் அதிகரிக்காது. வீணான முதலீடு என்ற வகையில் கூடுதல் செலவுதான் ஏற்படும்.
விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை
தெலுங்கு மாநிலங்களில் 50 விழுக்காடு நிலங்களில் ஜிங்(Zinc) பற்றாக்குறையும், 30 விழுக்காடு நிலங்களில் பாஸ்பரஸ் பற்றாக்குறையும், 17 விழுக்காடு அளவுக்கு இரும்பு சத்து பற்றாக்குறையும், 12 விழுக்காடு அளவுக்கு போரான் நைட்ரேட் பற்றாக்குறையும், ஐந்து விழுக்காடு அளவுக்கு மாங்கனீஸ் பற்றாக்குறையும் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தேவைப்பட்டால் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் பூச்சி மருந்துகள், ரசாயனங்களை எச்சரிக்கையுடன் உபயோகிக்கும்போதும் பயிர் சாகுபடி செலவை குறைக்க முடியும் என்பதில் விவசாயிகள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை.
உலக நாடுகளில் பல பூச்சி மருந்துகளுக்கு தடை இருந்தபோதிலும் இன்றைக்கும் கூட நாட்டில் அவைகளை உபயோக்கின்றோம். கேரளாவில் எண்டோசல்ஃபானை கண்மூடித்தனமாக உபயோகித்ததன் பக்க விளைவுகளை நாம் இன்னும்கூட அனுபவிக்கின்றோம்.
இது போன்ற பூச்சி மருந்துகளை தடை செய்யும் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு முன் வைப்பது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், எதிர்ப்புகள் காரணமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது. இதுவரைக்கும், இதைத் தடுக்கக் கூடிய எந்த ஒரு சட்டமும் இல்லை.
தெலுங்கு மாநிலங்களில் ரசாயனங்கள் உபயோகிப்பது அதிகரித்திருக்கிறது
27 முக்கிய பூச்சு மருந்துகளை தடை செய்வது குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. மனிதர்களின் சுகாதாரத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி அழிக்கிறது என்றும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் கூட, ஆச்சர்யகரமான வகையில் இன்னும் அதன் உபயோகத்துக்கு தடை விதிக்கப்படுவதற்கான தாமதம் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தரமான உணவுக்கான முக்கியத்துவம் முன்னெடுக்கப்படும் நிலையில், ரசாயனங்களை உபயோகிப்பது குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்களில் சர்வதேச சராசரியை விட அதிக அளவுக்கு ரசாயனங்கள் உபயோகிக்கப்படுகின்றன என்பதற்கு அண்மைகால செய்தியே சிறந்த உதாரணமாக இருக்கிறது.
இந்தத் தருணத்தில், பழங்கள், காய்கறிகள், பச்சைக்காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் பயப்படுகின்றனர். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சத்தைகளில் வியாபாரிகளிடம் கொடுத்த பின்னர், அவர்கள் பழங்கள், காய்கறிகளை உரிய காலத்துக்கு முன்பே பழுக்கச் செய்வதற்காக கண்மூடித்தனமாக தடை செய்யப்பட்ட ரசாயனங்களை உபயோகிக்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக அதிகரித்திருக்கும் விழிப்புணர்வு