பொதுவாகவே மக்களிடையே வேலைப்பளு, மன அழுத்தம், ஒருவித பதற்றம், நடத்தை சார்ந்த பிரச்னைகள் ஆகியவைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து விடுபட பலரும் மருத்துவர்களை நாடி வருகின்றனர். ஆனால், மருந்துகளால் சில சமயங்களில் பக்க விளைவுகளும் வருகின்றன.
எனவே, பெரும்பாலானோர் உடற்பயிற்சி, யோகா என்ற நிலையினை தேடிச்செல்கின்றனர். இதனிடையே மூலிகைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக,
அஸ்வகந்தா டீ:கடந்த 2019ஆம் ஆண்டில் அஸ்வகந்தா அடங்கிய டீயை குடித்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்ற அனுமானத்துடன் மூன்று குழுக்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் முதல் குழுவிற்கு 250 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ, இரண்டாம் குழுவிற்கு 600 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ மற்றும் மூன்றாம் குழுவிற்கு வேறு டீ கொடுக்கப்பட்டது.
8 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், 600 மி.கி. அஸ்வகந்தா டீயை உட்கொண்ட மாதிரி சோதனையாளர்களுக்கு ‘கார்டிசோல்’ என்னும் அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் அதிகளவில் குறைந்தது கண்டறியப்பட்டது.