தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்.? ட்ரோபோனின் ரத்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் - ETV Sukhibhava news

Silent Heart Attack: ஆய்வாளர்கள் மேற்கொண்ட ரத்த பரிசோதனையில் மாரடைப்பு அறிகுறி இல்லாத நோயாளிகள் மத்தியிலும் உயர் ட்ரோபோனின் அளவு காணப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2023, 4:22 PM IST

லண்டன்: ஐரோப்பாவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில், மாரடைப்பு அறிகுறி இல்லாத நோயாளிகளின் ரத்தப் பரிசோதனையில் உயர் கார்டியாக் ட்ரோபோனின் அளவு காணப்பட்டுள்ளது.

இதனால் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் நோயாளிகளின் ட்ரோபோனின் அளவை கண்டறியும் வகையில், ஆய்வாளர்கள் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், இருதய நோய் அல்லாத சுமார் 76 சதவீதம் பேரின் ரத்தத்தில் உயர் ட்ரோபோனின் அளவு காணப்பட்டுள்ளது எனவும் இது உயிரிழப்பிற்கான அறிகுறிகளில் ஒன்றாகக் கணக்கிடப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 46 சதவீதம் பேர் புற்று நோயாலும், 13 சதவீதம் பேர் இருதயம் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக, 30 நாட்கள் கண்காணிக்கப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஆனால் இது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தான் கொடுத்துள்ளது. உயிரியல் ரீதியாக இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் ஆய்வாளர்கள், இருதயம் தொடர்பான நோய் இல்லாத பிற நோயாளிகளிடமும் ட்ரோபோனின் அளவு காணப்படுவது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ட்ரோபோனின் என்றால் என்ன?ட்ரோபோனின் என்பது மனித இதயத்தின் தசைகளில் காணப்படும் ஒரு வகையான புரதம். இது இதயம் சுருங்கி விரிந்து செயலாற்றத் தேவையான புரதத்தை வழங்குகிறது. புரம் என்பது பொதுவாக ரத்தத்தில் காணப்படும். ஆனால் இந்த ட்ரோபோனின் புரதம் மட்டும் ரத்தத்தில் காணப்படுவது இல்லை. இவை மனிதனின் இதய தசைகள் மற்றும் எலும்புகளுக்குள் காணப்படுகின்றன.

இவை எலும்புகளும், இதயமும் இலகுவாகச் செயலாற்றத் தேவையான புரதத்தை வழங்குகிறது. ஆனால் மாரடைப்பு வரும்போது இதயம் தனது வேலையைச் செய்ய முடியாமல் இருக்கும். அந்த நேரத்தில் ட்ரோபோனின் புரதம் அதிகமாகச் சுரந்து இதயம் மேலும் இலகுவாக வேலை செய்ய உதவும். அப்போதுதான் ரத்தம் உடல் முழுவதும் பயணித்து ஆக்ஸிஜனை கடத்தும். இந்த பணியைச் செய்யும் ட்ரோபோனின் இதயம் தொடர்பான பாதிப்பு இல்லாத நபர்களுக்கும் அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் தற்போது மருத்துவ ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.

தேவைக்கு ஏற்ப சுரக்க வேண்டிய ட்ரோபோனின் இதயம் தொடர்பான பாதிப்பு இல்லாத நோயாளிகள் உடலிலும் சுரப்பது, விரைவில் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு உண்டான அறிகுறியாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவை மருத்துவ ரீதியாக முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:கர்ப்பிணி தாய் உட்கொள்ளும் உணவு பேரக்குழந்தைக்குக் கிடைக்குமா.? மரபணு ஆய்வில் வெளியான உண்மை.!

ABOUT THE AUTHOR

...view details