தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சைவ உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு கிடைக்கும் பயன்கள்!

சைவ உணவு அல்லது சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 24, 2023, 10:32 PM IST

சைவ உணவு அல்லது சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்கள் உணவுத் தேர்வுகளுக்கு வரும்போது வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் பரிசீலனைகளைக் கொண்டிருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. தாவர அடிப்படையிலான உணவு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, பல நபர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வாகவும் இருக்கிறது.

நன்கு சீரான சைவ உணவு இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் இருந்து குறைந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தற்போது, அசைவ புரத உணவுக்கான காய்கறி மாற்றுகளைப் பார்ப்போம்:

பருப்பு வகைகள்(Lentils) :

பருப்பு வகைகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. பருப்பு வகைகளை பல்வேறு வழிகளில் சமைத்து சாப்பிடலாம். மேலும் குழம்பு, சூப்கள், சாலட்கள் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.

பருப்பு வகைகள்

கொண்டைக் கடலை(Chickpeas) :

கொண்டைக் கடலையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொண்டைக் கடலையில் புரதம், இரும்பு, ஜிங்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. கொண்டைக் கடலையை குழம்பு வைத்தும், வேகவைத்தும் சாப்பிடலாம். சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

கொண்டைக் கடலை

டோஃபு(Tofu):

டோஃபூ என்பது சோயா விதையிலிருந்து தயாரிக்கப்படும் தயிராகும். இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது. இந்த இரும்புச் சத்து இரத்தத்தில் அதிகம் சேர்கிறது. ஹிமோகுளோபின் அதிகரிக்க துணைசெய்கிறது. இதை வறுத்தும் அல்லது இறைச்சிக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

டோஃபு

க்ரீக் யோகர்ட்(Greek Yogurt) :

கிரேக்க தயிர் எனக் கூறப்படும் க்ரீக் யோகர்ட்டில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இவற்றை வைத்து ஸ்மூத்தி அல்லது இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம்.

க்ரீக் யோகர்ட்

சியா விதைகள்(Chia Seeds) :

சியா விதைகளில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த சியா விதைகளை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்து பேஸ்ட் போல் அரைத்து சமைத்து சாப்பிடலாம்.

சியா விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள்(Nuts and Seeds) :

நட்ஸ் மற்றும் விதைகள் பலவித நற்குணங்களைக் கொண்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க, உடலுக்கு புத்துணர்ச்சியளிக்க, புரதச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற அனைத்து நன்மைகளையும் உள்ளடக்கியது. பாதாம், அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் அனைத்திலும் புரதச்சத்து அதிகம் உள்ளது.

நட்ஸ் மற்றும் விதைகள்

இதையும் படிங்க:2050இல் நீரிழிவு நோயின் தாக்கம் இவ்வளவா? - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

ABOUT THE AUTHOR

...view details