சென்னை: நம் உடல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டுமெனில், நம் உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நடப்பது, படுப்பது, உட்காருவது, ஓடுவது, ஆடுவது போன்ற எல்லா செயல்களுக்கும் எலும்புகள் தான் உதவுகின்றன. எலும்புகளுக்கு போதுமான சத்து கிடைக்காததால், மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் மற்ற பருவ காலங்களை விடவும், குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும்.
மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் சூரியனின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கும். இதனால் சூரியனிடம் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி சத்து கிடைக்காது. இதனால் எலும்புகள் வலுவிழந்து, வலி ஏற்படும். ஆகவே குளிர்காலத்தில் விட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஒரு மனிதனுக்கு நாள்தோறும் 10 மைக்ரோகிராம் (400IU) விட்டமின் டியும், 700 மில்லிகிராம் கால்சியமும் தேவைப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில், குளிர்காலத்தில் ஏற்படும் விட்டமின் டி குறைபாட்டினை போக்க, என்னென்ன பானங்களை அருந்தலாம் என்று பார்க்கலாம்.
பால்:பசும் பாலில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய அதே அளவு விட்டமின் டி பாலில் உள்ளது. குளிர்காலத்தில் விட்டமின் டி மற்றும் கால்சியம் பால் பருகுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
சோயா பால்:நீங்கள் வசிக்கும் பகுதியில் பசும் பால் கிடைக்காது என்பவர்கள் அல்லது தாவரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுபவர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் சோயா பாலை பருகலாம். சோயா பாலில் அதிகளவு கால்சியம் மற்றும் 107 - 11IU விட்டமின் டி உள்ளது. இது எலும்பு பராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.