சண்டிகர்: ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ். 67 வயதான இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஆவார். இவர் கோவிட் தடுப்பூசியை உடலில் செலுத்தி சோதிக்க தாமாக முன்வந்துள்ளார்.
இந்தச் சோதனை வெள்ளிக்கிழமை (நவ.20) காலை 11 மணிக்கு அம்பாலா கேன்ட் பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் நடைபெறுகிறது. இவரது உடலில் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்து 3ஆம் கட்ட சோதனையில் உள்ள கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதிக்கப்படவிருக்கிறது.