லக்னோ:உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் 137 நோயாளிகள் மருந்து எதிர்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒவ்வாமை, தோல் புண், தடுப்புகள், அரிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சக நோயாள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், இந்த மருந்து எதிர்வினை நோயால் அதிகபட்சமாக தோல் மருத்துவத்துறையில் உள்ள ரேடியோதெரபி பிரிவில் 26 பேரும், நுரையீரல் சிகிச்சை பிரிவில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 100 நோயாளிகளுக்கு அதிகப்படியான பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது.