தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சியில் உள்ளதா? - ஆக்ஸிடன்ட்கள் பாதிப்புகள்

நம் உடலில் செல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சிகளில் இருக்கும் டிபெப்டைடுகள் மூலமும் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Does meat have antioxidants
Does meat have antioxidants

By

Published : Feb 20, 2023, 3:31 PM IST

ஒசாகா:ஆக்ஸிடன்ட்கள் என்பது சுற்றுப்புறச் சூழல் மற்றும் நமது உடலில் ஏற்படும் நச்சு மூலக்கூறுகளாகும். இந்த மூலக்கூறுகள் செல்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாதிப்புகள் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக விரைவாக முதுமை அடைதல் உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இந்த ஆக்ஸிடன்ட்களை கட்டுப்படுத்த வைட்டமின்கள் சி மற்றும் ஈ, செலினியம், பீட்டா கரோட்டின், லைகோபீன், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பழங்கள், காய்கறிகளில் மட்டுமே அதிகளவில் இருப்பதாக கருதப்பட்டிருந்த நிலையில், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி மற்றும் மீன் இறைச்சிகளிலும் அதிகளவில் இருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இறைச்சி மற்றும் மீன்களில் உள்ள இமிடாசோல் டிபெப்டைடுகள் ஆக்ஸிடன்ட் பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இமிடாசோல் டிபெப்டைடுகள் நமது உடலிலும், பல்வேறு விலங்குகளின் உடலிலும் இயற்கையாகவே உற்பத்தியாகும் மூலக்கூறுகளாகும். இவை உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வை கட்டுப்படுத்துவதற்காக உற்பத்தியாகின்றன. இதுகுறித்து ஜப்பானில் உள்ள ஒசாகா மெட்ரோபொலிட்டன் யுனிவர்சிட்டி பேராசிரியர் ஹிதேஷி இஹாரா கூறுகையில், "எங்களது ஆராய்ச்சிக் குழு இறைச்சி மற்றும் மீன்களில் உள்ள இமிடாசோல் டிபெப்டைடுகளின் 2-ஆக்ஸோ-இமிடாசோல் மூலக்கூறுகள் அதிதீவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உணர்திறன் செல் பாதிப்பில் இருந்து நமது உடலை பாதுகாக்கின்றன. பல்வேறு வகையான இமிடாசோல் டிபெப்டைடுகள் இறைச்சியில் இருந்தாலும், 2-ஆக்ஸோ-இமிடாசோல் மூலக்கூறுகள் உணர்திறன் செல்களை பாதுகாப்பதால், கண் பார்வை, செவி திறன் உள்ளிட்டவை சீராக இருக்க உதவுகிறது. இதனால் முதுமையை தாமதப்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின் ஏ, இ, சி சத்துக்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், கீரை, ப்ரக்கோலி, பட்டாணி, ஆரஞ்சு மற்றும் அனைத்து வகையான பெர்ரிகளில் கிடைக்கிறது.

இதையும் படிங்க:குளிர்காலமானாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details