தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட கண் தானம் செய்யுங்கள்...! - suki bhava

மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட உங்களின் கண்களை கண் தான இரு வாரத்தில் தானம் செய்யுங்கள்...

Do A Charity, Donate Your Eyes
Do A Charity, Donate Your Eyes

By

Published : Sep 4, 2020, 7:05 PM IST

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 வரையான 14 நாட்கள், அதாவது இருவாரம் (fortnight) தேசிய கண் தானம் வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில், கண் தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கொடையாளரின் மறைவுக்குப் பிறகு நன்கொடைக்காக கண்களை அடகு வைக்க முன்வருவதையும் ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, கண்புரை, குருட்டுத்தன்மை உள்ளிட்ட முக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றால் கண்பார்வை இழக்க நேரிடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் அளிக்கும் கண் தானம் அவர்களின் வாழ்க்கைக்கு வழியை ஒளியை கொடுக்கலாம். இந்தியாவில், சுமார் 3 மில்லியன் மக்கள், அதிலும் குறிப்பாக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நீங்கள் செய்யும் ஒற்றை தானத்தால், வாழ்க்கையில் வாழ்வதற்கான நம்பிக்கை ஒளியை பெறுகின்றனர்.

யார் எல்லாம் கண் தானம் செய்யலாம்?

  • எல்லா வயதாகினும், பாலினம், இனம், எந்த ரத்தக் குழுவாகினும் கண் தானம் செய்யலாம்.
  • குறுகிய, நீண்ட பார்வைக்கு கண்ணாடி அல்லது லென்ஸ்கள் அணிந்தவர்கள், கண்களை அறுவை சிகிச்சை செய்தவர்கள்
  • நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா என எந்தவொரு தொற்று நோய்களும் இல்லாதவர்கள்

யார் கண்களை தான செய்யக் கூடாது?

எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி அல்லது சி, ரேபிஸ், காலரா, டெட்டனஸ், கடுமையான லுகேமியா, செப்டிசீமியா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை தானம் செய்யக்கூடாது.

கண் தானம் எவ்வாறு செய்யப்படுகிறது?

ஒரு சிறிய படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் கண்களை தானம் செய்யலாம். இதன் மூலம் ஒருவர் வாழ்க்கையில் ஒளியை பெறலாம். இந்த படிவங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுமட்டுமின்றி தற்போது, ஆன்லைனில் இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம். இதில் கீழே உள்ள இணைப்பை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

https://www.ebai.org/donator-registration/

  • உங்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் கண் தானம் செய்யுங்கள். ஏனென்றால் அவர்கள் தான் அலுவலர்களுக்குத் தெரிவிக்க முடியும். நீங்கள் உறுதியளித்தால், ஒரு தனிப்பட்ட கண் நன்கொடை அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.
  • இறந்தவர் அதற்காக முறையாக உறுதிமொழி அளிக்காவிட்டாலும், அவரின் குடும்ப உறுப்பினர் அவரின் கண்களை தானம் செய்யலாம்.
  • இதில் உயிரிழந்த நன்கொடையாளரின் உறவினர்கள், அந்த நபர் உயிரிழந்த பிறகு உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, கண் வங்கிக்கோ தகவல் அளிக்கவும். அதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 24 x 7 கிடைக்கும் கட்டணமில்லா எண்ணான 1919ஐ நீங்கள் அழைக்கலாம்.
  • இறந்தவரின் கண்களை மூடி, விசிறிகளை அணைத்து, ஏர் கண்டிஷனர் அல்லது குளிராக வைத்திருங்கள்.
  • ஒரு தலையணையின் உதவியுடன் அவர்களின் தலையை உயர்த்தி, ஈரமான பருத்தி துணியை இறந்தவர்களின் கண்களில் வைக்கவும்.
  • நன்கொடையாளர் இறந்த 6-8 மணி நேரத்திற்குள் கண்கள் அகற்றப்பட வேண்டும்
  • இந்த செயல்முறையை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ மேற்கொள்ளலாம்
  • இந்த செயல்முறை ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது. கண்களை அகற்றுவதற்கு 10-15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
  • இதில் அகற்றப்படுவது கண்ணில் உள்ள கார்னியா மட்டும்தான். முழு கண் அல்ல. இதனால் முகத்தின் சிதைவு ஏற்படாது.
  • நன்கொடையாளர், அவர்களது குடும்பத்தினரின் அடையாளங்கள் ரகசியமாகவே உள்ளன.
  • நன்கொடை செயல்பாட்டின் போது பணம் அல்லது வேறு கட்டணம் எதுவும் பெறப்படாது.

கண் தானம் செய்வதை சுற்றி பல மூட நம்பிக்கைகள் உலா வருகின்றன. அவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து கண் தானம் செய்தால்தான், மற்றவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியும். அதனால் கண் தானம் செய்வோம் என உறுதிமொழி ஏற்போம் இந்நாளிலிருந்து...!

இதையும் படிங்க...தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details