கோவிட் -19 தொற்றுநோய் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஆண்ட்ரோகேர் மற்றும் ஆண்ட்ரோலஜி இன்ஸ்டிடியூட் ஆண்ட்ரோலஜிஸ்ட் டாக்டர் ராகுல் ரெட்டியின் பேட்டியை பார்க்கலாம்.
கேள்வி: ஆண்களின் பாலியல் செயலிழப்புக்கு என்ன காரணம்?
- பதில்: பொது முடக்கம் (லாக்டவுன்) காரணமாக பொருளாதார பாதுகாப்பின்மை, மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இந்தப் பொதுமுடக்கத்துக்கு முன்னர் சுறுசுறுப்பாக இருந்தவர்கள் கூட தற்போது பாலியல் செயலிழப்பை உணர்கின்றனர்.
அதற்கான முக்கிய காரணிகளாக குறைந்த உடற்பயிற்சி மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளுதல் திகழ்கிறது. பொதுவாக வைட்டமின் டி மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆண்களுக்கு முக்கியம். இவைகள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதுமுடக்கம் காரணமாக ஆண்களுக்கு போதிய உடற்பயிற்சி கிடைக்கவில்லை. இவைகள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பாதித்துள்ளன.
கேள்வி: ஆன்லைன் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா?
- பதில்: ஆன்லைன் சிகிச்சை வசதிகள் பற்றி சிலருக்குத் தெரிந்திருந்தாலும், பலருக்கு இது தெரியாது. அதே நேரத்தில் சிலர் ஆன்லைன் ஆலோசனையை எடுக்க தயங்குகின்றனர்.
கேள்வி: கரோனா வைரஸூக்கும் ஆண்களின் விந்தணுக்கள் குறைபாடுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
- பதில்: கோடைக்காலத்தில் ஆண்களின் விந்தணுக்கள் பொதுவாக 10 விழுக்காடுக்கு குறைவான மாறுபாட்டை அடையும். ஆனால் இந்த எண்ணிக்கை 70 விழுக்காடு ஆக குறைந்ததை காண முடிந்தது. இதற்கு கரோனா வைரஸூன் தாக்கம் காரணமா? அல்லது மன அழுத்தம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து மருத்துவர்கள் கண்டறியவில்லை.