கரோனா தொற்றுக்கான முதல் சுற்று தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கடுத்து அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்த நமது அரசு தீவிரம் காட்டிவருகிறது.
கரோனா தடுப்பூசிக்கு பயமா...இத படிச்சிட்டு போங்க!
உலகின் மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள கரோனா தடுப்பூசியே மிகச்சிறந்த ஆயுதமாகும். இதன் மூலமாகவே நாம் நம்முடைய இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முதல் நாளிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நம்முடைய இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்தாலும் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
corona vaccination guidelines
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னதாக நாம் மேற்கொள்ளவேண்டிய சில நெறிமுறைகளை இங்கே காணலாம்:
- கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அனைத்து வயதானவர்களும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.
- தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நமது உடல் நீரேற்றம் உள்ளதாக விளங்க ஆரோக்கியமான உணவை உண்டு உடலைப் பராமரிக்க வேண்டும்.
- தடுப்பூசியினால் ஒவ்வாமை இருக்கும் நபர்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள், உயிரிழப்பைத் தடுக்க 100 சதவிகிதம் செயல் திறன் கொண்டவை. கடுமையான கரோனா தொற்றுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் அதிகமாக செயல்திறன் கொண்டு செயல்படும். இந்தத் தடுப்பூசிகள் அறிகுறிகளற்ற தொற்றுக்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டவை.
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இவர்கள்தான் தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்த வயதினர் தடுப்பூசி போட நாம் ஊக்குவிக்க வேண்டும்.
- கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமாகி எட்டு முதல் 12 வாரங்கள் கடந்த நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
- கரோனாவால் பாதிக்கப்பட்டு பிளாஸ்மா சிகிச்சை பெற்றுக் கொண்ட நபர் எட்டு முதல் 12 வாரங்கள் கழித்தே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பானது.
- கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, முன்களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிகளும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உணவு, மருந்துகளுக்கு ஒவ்வாமைகள் உள்ளவர்களும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களும் மருத்துவர்களை அணுகி ஆலோசித்து பின்னர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
- தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் மது அருந்தக்கூடாது எனக் கூறுவது முற்றிலும் தவறானதாகும். தடுப்பூசி ஆண்மையை இழக்க செய்கிறது என்பதும் ஒரு நபரின் டிஎன்ஏவை மாற்றுகிறது என்பதும் நிரூபிக்கப்படாத வதந்திகளாகும்.
- தற்போது உள்ள சூழ்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட தாமதம் ஆகும்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னர் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். கீமோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வரும்போது நான்கு வாரங்கள் கடந்த பின்னரே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காய்ச்சல், உடல் வலி, தலை சுற்றல், தலைவலி ஆகியவை தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வரும் சாதாரண அறிகுறிகள் ஆகும். இதற்கு சாதாரண பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் போதுமானது.
- நிரூபிக்கப்படாத வதந்திகளை நாம் நம்பக்கூடாது. சரியான தகவல்களைப் பெற மருத்துவர்களை கலந்தாலோசிப்பதே சிறந்த வழி ஆகும்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசியின் உண்மைகளும் கட்டுக்கதைகளும்!