தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2020, 6:56 PM IST

ETV Bharat / sukhibhava

வெட் வைப்ஸ்களை உபயோகப்படுத்துகிறீர்களா? இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்

நம் அன்றாட வாழ்வில் ஒன்றாகிப்போன வெட் வைப்ஸ் குறித்து தெரியாதவர்கள் குறைவுதான். வீட்டை சுத்தம் செய்ய, அவ்வப்போது சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இந்த வெட் வைப்ஸை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? என்பதை பார்க்கலாம் வாங்க...

common mistakes made while using in wet wipes
common mistakes made while using in wet wipes

சருமத்தை சுத்தம் செய்ய, குழந்தைகளுக்கு டையப்பர் மாற்ற, வீட்டில் இருக்கும் பொருள்களை சுத்தம் செய்ய நாம் வெட் வைப்ஸ் எனப்படும் ஈரமான துணியை பயன்படுத்துவோம். கவரில் இருந்து பிரித்து எடுக்கும்வரை இந்த துணிகள் ஈரமாகவே இருக்கும். நோயாளிகளை சுத்தம் செய்யவும் நாம் இந்த வெட் வைப்ஸ் துணிகளை பயன்படுத்துவோம்.

சமீப காலமாக வீட்டில் இருக்கும் கிருமிகளை, வைரஸ்களை துடைத்து எடுக்க வெட் வைப்ஸ்களை தேடும் படலத்தில் நம்மில் சிலர் இறங்கியிருப்போம். இதன் காரணமாக மார்க்கெட்டில் கிடைக்கும் பேக்டீரியாக்களை கொல்லும் வெட் வைப்ஸை நாம் வாங்க நினைக்கலாம். ஆனால், அது கிருமிகளை அழிக்க பயன்படாது. இந்த வைப்ஸ்களை உபயோகப்படுத்துவதிலேயே நாம் சில தவறுகளை அன்றாடம் செய்துவருகிறோம். அது குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்...

உடம்பில் உபயோகப்படுத்துவது:

ஆன்டி பாக்டீரியல் வைப்ஸ்களை நம் சருமத்தில் பயன்படுத்தலாம். ஆனால் கிருமி நாசினி கொண்ட வைப்ஸ்களை நாம் அறவே தொடக்கூடாது. கிருமி நாசினி இருக்கும் வெட் வைப்ஸ்கள் உடலில் அரிப்பு உள்ளிட்ட அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு காரணம் அதில் இருக்கும் ரசாயனங்கள்தான். எனவே, இது போன்ற கிருமிநாசினி இருக்கும் வெட் வைப்ஸ்களை பயன்படுத்தும் முன் அட்டையில் இருக்கும் தகவலை ஒருமுறை படித்துவிடுங்கள்.

மென்மையான பொருள்களில் பயன்படுத்தாதீர்கள்:

துணிகள், சோபாக்கள் போன்ற மென்மையான பொருள்களை துடைக்க வைப்ஸ்களை பயன்படுத்தாதீர்கள். அவை வைப்ஸ்ஸில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும். ஈரம் இல்லாமல் இந்த பொருள்களை சுத்தம் செய்யமுடியாது. கடினமாக இருக்கும் நாற்காலிகள், மேஜைகளில் வெட் வைப்ஸை பயன்படுத்தினால் ஈரப்பதம் உறிஞ்சப்படாது. மேலும் இப்பொருள்களில் சிறிது நேரம் ஈரப்பதம் தங்கியிருக்கும்.

ஒரே வைப்ஸை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்:

நம்மில் சில சிக்கனவாதிகள் ஏற்கனவே உபயோகப்படுத்திய வைப்ஸை மீண்டும் பயன்படுத்துவோம். இது முற்றிலும் தவறு. கிருமிகள் இருக்கும் ஒரு இடத்தை வைப்ஸால் துடைத்துவிட்டு வேறோரு இடத்தில் அதை வைப்ஸை வைத்து துடைத்தால் அந்த இடங்களில் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கிருமிகள் அதிகம் இருக்கும் இடங்களில் பயன்படுத்திய வைப்ஸ்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் மக்களே.

பழங்களை சுத்தம் செய்கிறீர்களா?

கிருமி நாசினி கொண்ட வெட் வைப்ஸால் பலவற்றை சுத்தம் செய்யலாம். ஆனால் நாம் உண்ணக்கூடிய உணவு பொருள்கள் குறிப்பாக பழங்களை சுத்தம் செய்ய இந்த வெட் வைப்ஸ்களை பயன்படுத்தாதீர்கள். சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்து, காய்ந்த துணியால் துடைத்துவிடுங்கள். அதுவே போதுமானது.

'நோயெதிர்ப்பு சக்தி' 'இதய ஆரோக்கியம்' காப்பரில் மறைந்திருக்கும் பல மருத்துவ அதிசயங்கள்!

பொம்மைகளுக்கு பெரும் எதிரி:

குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை வெட் வைப்ஸ்களால் சுத்தம் செய்யாதீர்கள். சாதாரணமாகவே குழந்தைகள் பொம்மைகளை வாயில் கடிக்கும் பழக்கமுடையவர்கள். எனவே மோசமான கெமிக்கல்கள் குழந்தைகளின் உடம்பில் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் பொம்மைகளை வெட் வைப்ஸ்களை கொண்டு சுத்தம் செய்யாதீர்கள். மாறாக சோப்பு தண்ணீரில் நன்கு கழுவி சாதாரண தண்ணீரில் ஒருமுறை கழுவி விடுங்கள்.

அழுக்கை சுத்தம் செய்யும் முன்னர் இதை ஒருமுறை செய்துவிடுங்கள்:

அழுக்கு, தூசி இருக்கும் இடத்தை வெட் வைப்ஸ்களால் சுத்தம் செய்யும் முன்னர் துணியால் துடைத்தோ அல்லது சோப்பு தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு அதன் பிறகு வெட் வைப்ஸ்களை பயன்படுத்துங்கள். இவை அழுக்கை எடுத்தாலும் கூட, அந்த இடங்களை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படலாம்.

பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்:

வெட் வைப்ஸ்களை பாதுகாப்பாகத்தான் அப்புறப்படுத்த வேண்டும். சிலர் கழிவறையில் வெட் வைப்ஸ்ஸை போட்டுவிட்டு பின்னர் அதனை ஃப்ளஷ் செய்துவிடுவர். இதனால் வெட் வைப்ஸ்கள் பைப்பில் போய் அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. முறையே வெட் வைப்ஸ்களை பாதுகாப்பாக கவரில் போட்டு பின்னர் அப்புறப்படுத்த வேண்டும்.

பத்திரமாக ஸ்டோர் செய்யுங்கள்:

வெட் வைப்ஸ்களை குளிரான வறண்டிருக்கும் இடத்தில் வைக்கவேண்டும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அதில் இருக்கும் ஈரம் காய்ந்து உபயோகப்படாமல் போகும்.

இதையும் படிங்க...உடல் எடையைக் குறைக்க இப்படி தண்ணீர் குடிச்சு பாருங்க! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details