சென்னை:இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. எனவே சிறிதும் சந்தேகமின்றி இஞ்சியைப் பலவழிகளில் உணவில் சேர்க்கிறோம். இஞ்சி டீயாக, மசாலாவாக, ஊறுகாயாக, மாஇஞ்சி என பல வகைகளில் இஞ்சியை உட்கொண்டு பலனை பெறுகிறோம். ஆனால் இஞ்சியை சமைக்கும் போது, ஒவ்வொரு முறையும் தவறு இழைக்கிறோம். அது என்னவென்று தெரியுமா?. அதிக மருத்துவ குணமுள்ள இஞ்சியின் தோலை நீக்கி விடுவது தான். இதுவரை அப்படிச் செய்து இருந்தால் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் தூக்கி எறியும் இஞ்சி தோலை பலவழிகளில் பயன்படுத்தலாம். அவற்றை பார்க்கலாமா.
சளி, இருமலுக்கு மருந்து:மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும். இஞ்சி தோலைப் பயன்படுத்தி, இதிலிருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சி தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ளலாம். சிறிது இஞ்சிப் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தண்ணீரில் இஞ்சி தோலை கலந்து கொதிக்க வைத்து இஞ்சி டீயாகவும் குடிக்கலாம். இதனுடன் இரண்டு கிராம்பு, ஏலக்காய் சேர்ப்பது நலம்.