தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

மழைக்கால மழலை பராமரிப்பு...!

மழைக்காலங்களில் குழந்தை பராமரிப்பில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எப்படி கையாள்வது என்பது குறித்து விவரிக்கிறார் நிபுணர் விஜயானந்த் ஜமல்பூரி...!

மழைக்கால மழலை பராமரிப்பு...!
மழைக்கால மழலை பராமரிப்பு...!

By

Published : Aug 24, 2020, 2:40 AM IST

மழைக்காலம் மண்ணிற்கு ஈரத்தையும், மனதிற்கு குளிர்ச்சியை கொடுக்கும். இருந்தபோதிலும், இந்த மழைக்காலத்தில் பல வகையான நோய்கள் பெருக்கெடுக்கின்றன என்றே சொல்லலாம். இந்த மழைக்காலம் பெரியவர்களுக்கே உடல்நிலையில் பல மாற்றங்களை கொடுத்து சில பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதில் மழைக்காலம் கடுமையான வெப்பத்திலிருந்து நமக்கு ஓய்வு கொடுத்தாலும், இந்த காலத்தில் குழந்தைகளை கையாள்வது சிரமமாகும். அப்படி இருக்கும் பட்சத்தில், குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோருக்கு முன்னால் புதிய சவால்கள் எழுந்துள்ளன. இதனை தீர்க்க நமக்கு பல டிப்ஸ்களை கொடுக்கிறார் நியோனாட்டாலஜி நிபுணர் மருத்துவர் விஜயானந்த் ஜமல்பூரி.

மழைக்கால மழலை பராமரிப்பு...!

“பருவமழை மிகவும் புத்துணர்ச்சியூட்டும், ஆனால் இந்த பருவத்தில் குழந்தை பராமரிப்பு, குறிப்பாக பெற்றோருக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். குழந்தைகளுக்கு எதையும் பேசவோ விளக்கவோ முடியாது என்பதால், பெற்றோர்கள் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு தேவையானதைச் செய்ய வேண்டும். இப்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால், அதற்கு ஏற்றவாறு தங்களின் குழந்தைகளை கவனிப்பது அத்தியாவசியமாகும்” என்கிறார் மருத்துவர் விஜயானந்த்.

அடிக்கடி ஈரப்பதமாக்குங்கள்:

குழந்தைகளுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் என்பதால், அவர்களின் சருமத்தை அடிக்கடி ஈரப்பதமாக்குங்கள். அப்படி இல்லையென்றால் குழந்தை சருமம் இருகி, வெடிக்க கூடும். அதனால் குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பான மாய்ஸ்டரைசரைக் கொண்டு 2-3 முறை அடிக்கடி ஈரப்பதமாக்குங்கள்.

குளிக்கும் நீரின் வெப்பநிலை:

மழைக்காலம் நிலவுகிறது என வெந்நீரால் பிள்ளையை குளிப்பாட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கு பதிலாக, மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை வைத்து குளிப்பாட்ட வேண்டும்.

பருவமழைக்கால நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

பருவமழைக் காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும், தற்போது கரோனாவும் பரவிவருவதால், குழந்தைகளை இந்த காலத்தில் கவனமுடன் காப்பாது அவசியம். அதனால் உங்கள் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தும்மல், இருமல், வைரஸ் தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கி வையுங்கள். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை கொடுங்கள்.

குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்ப, உங்கள் குழந்தையை சூடான ஆடைகளால் மூடி வைக்கவும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களேகவனியுங்கள்:

மழைக்கால மழலை பராமரிப்பு...!

தாய்ப்பால் குழந்தைகளில் பசியை மட்டுமின்றி, பல ஊட்டச்சத்துக்களை, நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கிறது. அதனால் பாலூட்டும் தாய்மார்களான நீங்களும் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

குழந்தைகளின் பக்கத்தில் கொசுவை அண்டவிடக் கூடாது:

  • பருவமழைக் காலத்தில் கொசுக்களால் நோய்கள் பரவும் என்பதால், கொசுக்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் இருக்க வீட்டின் கதவுகள், ஜன்னல்களில் கம்பி வலை ஒன்றை பின்னலாம்.
  • கொசு வலை பாதுகாப்புடன் குழந்தையை வையுங்கள்.
  • கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வண்ணம் தண்ணீர் தேங்காமல் வீட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மூலைகளை சுத்தப்படுத்தி வையுங்கள்.
  • சமையல் அறையில் தண்ணீர் உள்ள பாத்திரங்கள் மூடியுள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
  • குழந்தைகளுக்கு ரசாயன கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
  • குழந்தைக்கு அருகில் கொசு விரட்டும் சுருள்களை வைக்க வேண்டாம். ஏனெனில் இதனால் சுவாச பிரச்னைகள் ஏற்படும்.

மேற்சொன்ன டிப்ஸ்களை இந்த பருவமழைக்காலத்தில் பின்பற்றி, குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க....தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details