சென்னை:தற்போது உள்ள மழைக்காலத்திலும், இனி வரவிருக்கும் குளிர் காலத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளியால் அவதிப்படுவர். இதன் காரணமாக மூக்கடைப்பு ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்க முடியாமல் கஷ்டப்படுவர். இந்த பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தின் மூலம் எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.
ஆவிப்பிடித்தல்:ஒரு பாத்திரத்தில் தும்பை, நொச்சி, யூகலிப்டஸ் அல்லது புதினா போன்ற மூலிகை இலைகளை சேர்த்து ஆவிப்பிடித்தால், நாசிப்பாதைகள் திறந்து நல்ல சுவாசத்திற்கு வழிவகுக்கும்.
மஞ்சள் கலந்த பால்: வெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் மூக்கடைப்பு நீங்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது நாசிப்பாதைகளில் உள்ள வீக்கத்தை சரி செய்யும்.
துளசி டீ:துளசி டீ, சளி மற்றும் இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
யூகலிப்டஸ் எண்ணெய்:சுடுதண்ணீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து, ஆவிப்பிடித்தால், மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.