திருமணமான தம்பதிகளிடையே தாம்பத்தியம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இருவருக்கு இடையில் இருக்கும் உறவுகள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் பயணிக்கத் தாம்பத்தியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிய கணவர்களோ, மனைவிகளோ இருவருக்கும் இடையிலான தனிமை நேரத்தை முற்றிலுமாக மறக்கின்றனர்.
தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாதபட்சத்தில், நிச்சயம் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைய தொடங்கிவிடும். நீண்ட நாள்களாக தாம்பத்தியம் கொள்ளாதவர்களிடம், பலவிதமான பாதிப்புகளைக் கண்டறிய முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பாதிப்பு ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு விதமான பாதிப்புகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1. கவலையாக உணர்வது
உடலுறவு உங்களது துணையுடன் பிணைந்திருப்பதை உணரவைக்கிறது. உடலுறவில் ஈடுபடாதபோது, அவை மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உங்களைச் சோர்வடையச் செய்கிறது.
எதிர்பார்க்கும் அன்பு கிடைக்காதபட்சத்தில், உங்களைக் கவலைக்குள் மூழ்கச் செய்கிறது. இது தவிர, உடலுறவின்போது மகிழ்ச்சியான ஹார்மோன்களான ஆக்சிடாஸின், எண்டோர்பின்கள் வெளியாகின்றன. இது மன அழுத்தத்தைக் குறைத்திட உதவுகிறது.
2. பலவீனமாகும் நோய் எதிர்ப்புச் சக்தி
உடலுறவு நோய் எதிர்ப்புச் சக்தியுடன் தொடர்புடையது ஆகும். ஏனெனில் உடலுறவின்போது இம்யுனோகுளோபுலின் A அல்லது IgA அளவு அதிகரிக்கிறது. இது கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, உடலுறவில் ஈடுபடுவது குறையும்பட்சத்தில் வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3. ஞாபகச் சக்தி குறையும்
தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபடுவது, ஞாபகச் சக்தியை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இருப்பினும், இதில் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. உடலுறவு குறைந்த வாழ்க்கை மந்தமாகச் செல்லும்பட்சத்தில், பழைய நினைவுகளை நினைவுபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.