கோடைக்காலத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும். சொல்லப்போனால், வெயில் காரணமாக ஏற்படும் வியர்வையால் பலருக்கு உடலில் துர்நாற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த துர்நாற்றம் உங்களை அசௌகரியமாக உணர வைக்கும். இதற்காக பர்பியூம், பவுடர்கள், எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தி வந்திருக்கலாம். இருப்பினும், வியர்வை குறைந்திருக்காது. ஆகவே, பின்வரும் 10 எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
1. ஒரு நாளைக்கு 2 முறை குளியல்: அதிக வியர்வை பலருக்கு ஏற்படுவதில்லை. சிலருக்கு மட்டுமே ஏற்படும். அவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை குளிக்கலாம். இது கோடைக்காலங்களில் உடலை குளிர்விப்பது மட்டுமல்லாமல், துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்தும்.
2. குளியலுக்கு பின் செய்யவேண்டியது: குளித்த பின்போ அல்லது ஆடைகளை அணிவதற்கு முன்போ உடலில் ஏற்பட்ட வியர்வை துண்டை பயன்படுத்தி முழுமையாக துடைக்க வேண்டும். இல்லையென்றால், ஈரம்படாத ஆடைகளில் வியர்வை எளிதாக பரவிவிடும். துர்நாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
3. தேவையற்ற முடிகளை அகற்றவும்:சிலர் ஸ்லீவ்லெஸ் அணிவது வியர்வையை குறைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், முழுக் கை சட்டைகளை அணிந்தாலும், ஸ்லீவ்லெஸ் அணிந்தாலும் வியர்வை துர்நாற்றம் வீசும். ஆகவே, அண்டர் ஹார்ம் முடிகளை அடிக்கடி அகற்ற வேண்டும்.
4. பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்பாடு: கோடைக்காலங்களில் வியர்வையால் அரிப்பு ஏற்படும். இது பாக்டீரியாவால் உருவாகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே, பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். இந்த சோப்புகள் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.
5. எண்ணெய்கள் பயன்பாடு:லாவெண்டர், மிளகுக்கீரை, பைன் எண்ணெய்களை குளித்த உடன் லேசாக உடலில் பூசிக்கொள்வது, உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். இது நீண்ட நேரம் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.