விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(26). இவருடைய மனைவி தனலட்சுமி(26). இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், விக்னேஷ் குமார் சிவகாசியிலும் தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனலட்சுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்(25) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக் கூறப்படுகிறது. நேற்று (ஜூன் 24) இரவு விக்னேஷ் குமார் திடீரென படந்தாலிலுள்ள தனலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது சதீஷ், தனலட்சுமி இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த விக்னேஷ், சதீஸை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.