தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் இளைஞர் உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை - Virudhunagar Youth thrown into the tree Death

விருதுநகர்: புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

விருதுநகரில் இளைஞர் மரத்தில் தூக்கிட்டு உயிரிழப்பு
விருதுநகரில் இளைஞர் மரத்தில் தூக்கிட்டு உயிரிழப்பு

By

Published : Jul 7, 2020, 6:40 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் மகன் மகேந்திரன் (23). இவர் வீடு கட்டும் தொழில் செய்து வந்தார். சில நாட்களாக மகேந்திரனும் தென்காசி மாவட்டம் பந்தப்புளி ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே புதிய பேருந்து நிலையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள மகேந்திரனின் பெரியம்மா வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இப்புகாரின் பேரில் காவல் துறையினர் மகேந்திரனிடம் இளம் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துவர கூறியுள்ளனர். அங்கு சென்ற அவர்களிடம் காவல் துறையினர் பேசி பெண்ணை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கு பின்னர் மகேந்திரன் வீட்டிற்கு செல்லாததால் அவரது பெற்றோர், உறவினர்கள் அனைத்து இடத்திலும் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று அவர் பெரியம்மா வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details