தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருநங்கையுடன் காதல்' - பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்! - virudhunagar transgender marriage

விருதுநகர் : வலையங்குளம் கிராமத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

trams
trans

By

Published : Sep 4, 2020, 6:56 PM IST

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தினகரனின் மகன் கருப்பசாமி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார். இதைத் தொடர்ந்து, தனது பெயரை ஹரினா (24) என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது தாய்மாமன் கந்தசாமியின் மகன் கருப்பசாமி (27), நீண்ட நாள்களாக ஹரினாவை காதலித்து வந்துள்ளார். ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் கருப்பசாமி, திருநங்கையான ஹரினாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய பெற்றோர்கள், பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்தோடு காரியாபட்டி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் இருவருக்கும் இன்று (செப்.4) திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திருநங்கைகள் பலரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details