தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! - வட்டாட்சியர் அலுவலகம்

விருதுநகர்: சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

மகளிர் சுய உதவி குழு
மகளிர் சுய உதவி குழு

By

Published : Jun 13, 2020, 9:02 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மகா சேமம், கிராமவிடியல், ஈஷாப், ஆசீர்வாதம், வையாலோ, கிராமின் கூட்டம், பெல், ஸ்டார், வரம், துவாரா உள்ளிட்ட மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கியுள்ளன.

இந்த நிறுவன ஊழியர்கள் கரோனா நெருக்கடிக்கு மத்தியில், கொடுத்த கடனை திருப்பி கேட்பதாகவும், திருப்பி செலுத்த முடியாத பெண்களை அவதூறாக பேசுவதாகவும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கூறுகின்றார்கள்.

மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி சாத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியத்திடம் அளித்தனர். வட்டாட்சியர் அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 17 வயது, 9ஆம் வகுப்பு.. இரட்டை கொலையில் சிக்கிய மாணவன்!

ABOUT THE AUTHOR

...view details